விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ginger (பேச்சு | பங்களிப்புகள்)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 83:
 
இதை விளக்க முடியுமா? ஒரு ஆங்கிலக் கட்டுரையில் ஆங்கிலச் சொல் புரியாவிட்டால் ஆங்கில அகரமுதலியைப் பார்க்கிறோம். தமிழுக்கு மட்டும் ஏன் கூடாது? எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த சொற்களை வைத்து வார இதழ் வெளியிடலாம். கலைக்களஞ்சியம் வெளியிட முடியாது--[[பயனர்:Ravidreams|ரவி]] 14:07, 2 ஜூலை 2009 (UTC)
 
அதுமாதிரி தமிழில் கலைக்களஞ்சியத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. வெகு குறைவாக பயின்றவரும் என்று வரும்பொழுதே அகராதி தேவையில்லை. எளிய என்று வரும்பொழுதே அகராதி தேவை யில்லை. நமது தாய் மொழிக்கு அகராதி தேவையில்லை. ஆங்கிலம் நமது தாய் மொழியல்ல. இங்கு நாம் தமிழ் இலக்கியம் படிப்பதற்கான இடமல்ல. அனைவரும் பயனபடுத்துகின்ற கலைக்களஞ்சியம். இலக்கியத்தில் புரியாதவைகளும் இங்கு புரியவேண்டும். ஒவ்வொன்றையும் அகராதி பார்த்து பார்த்து பேச சொல்லமுடியுமா. விழுமியம் உடனே தெரியாது ஆனால் மேன்மை என்பது அனைவருக்கும் 3 வகுப்பு வரை படித்தவருக்கும் தெரியும். ஆங்கிலத்தில் எளிய ஆங்கிலம், ஆங்கிலம் என்று இரண்டுத் தளம் உள்ளது. இங்கும் தேவை என்றால் நீங்கள் சொல்வது போல் இலக்கியத் தமிழ் எளியத் தமிழ் என்று பிரித்து தளம் வைத்து பயனபடுத்திக் கொள்ளலாம்.--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 15:57, 2 ஜூலை 2009 (UTC)
 
 
Ginger, தமிழ் விக்கிப்பீடியாவை விட்டுவிட்டு, கன்னட, தெலுங்கு, முதலான தென்னிந்திய திராவிட மொழி விக்கிகளையும், வடவிந்திய மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழி விக்கிகளையும் பாருங்களேன். அங்கெல்லாம், கிரந்த எழுத்துச் சிக்கல் ஏதும் இல்லை, சமசுக்கிருத சொற்களையும் உருது, அரபி, ஆங்கிலம் முதலான எம்மொழிச்சொற்களையும் எடுத்தாள்வதில் பெரும் சிக்கல் இல்லைதானே. ஏன் அவர்கள் வளரவில்லையாம்? தமிழைப் பற்றியும், தொல்காப்பியர், நன்னூலார் பற்றியும் நீங்கள் கூறிய கருத்துகளை நீங்கள் மீள்பார்வை இட உங்களுக்கு நல்வாய்ப்புகள் வர வேண்டுகிறேன். சமசுக்கிருதம் உங்களுக்குப் பிடித்திருந்தால், கட்டாயம் சமசுக்கிருத விக்கி உள்ளது அங்கு சென்று நீங்கள் தொண்டாற்றுங்கள். அல்லது சமசுக்கிருத நூல்கள் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் இங்கு தமிழ் விக்கியில் வளமான கட்டுரைகள் எழுதுங்கள். தமிழில் எதைப்பற்றி வேண்டுமானாலும், எவ்வளவு ஆழ அகல நுட்பங்களுடன் மிக நேர்த்தியாய் எழுத இயலும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். --[[பயனர்:செல்வா|செல்வா]] 15:14, 2 ஜூலை 2009 (UTC)
Return to the project page "மொழி நடை வழிகாட்டி".