விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 103:
 
கூடுதல் அறிவு வேண்டும் என்றால் அதைத் துல்லியமாகத் தெரிவிப்பதற்கான சொற்களைப் பயன்படுத்தத்தான் வேண்டும். தேவைப்படும் புதிய சொற்களை உருவாக்கத் தான் வேண்டும். ஆங்கில மோகத்தில் உள்ள, ஆங்கிலத்தை முதன்மையாகச் சார்ந்திருக்கும் தமிழரைப் பற்றி நாம் கவலைப்பட இயலாது. '''அறிவு பெறுவதற்கான முதன்மை வழியாகத் தமிழை நாடுபவர்களுக்கு ஆங்கில வழிக்கு குறையாத அறிவை இயன்ற அளவு இலகுவாகத் தருவோம்.'''--[[பயனர்:Ravidreams|ரவி]] 18:55, 2 ஜூலை 2009 (UTC)
 
பாடநூல்களில் உள்ளது போல்தானே சென்னேன் அது எளியநடை தானே. இதே உரைநடையைத்தான் பட்டபடிப்புக்கும் பயன்படுத்துகின்றார்கள். கலைச்சொற்களை நாம் அது விஞ்ஞான முறையில் தான் குறிப்பிட முடியும். பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களில்தான் சொன்னேன். அறிவியல் சொற்கள்தான் மாறப்போகின்றன. வாக்கியங்கள் அப்படியே அதே மாதிரி நடை தானே.--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 20:14, 2 ஜூலை 2009 (UTC)
 
Ginger, தமிழ் விக்கிப்பீடியாவை விட்டுவிட்டு, கன்னட, தெலுங்கு, முதலான தென்னிந்திய திராவிட மொழி விக்கிகளையும், வடவிந்திய மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழி விக்கிகளையும் பாருங்களேன். அங்கெல்லாம், கிரந்த எழுத்துச் சிக்கல் ஏதும் இல்லை, சமசுக்கிருத சொற்களையும் உருது, அரபி, ஆங்கிலம் முதலான எம்மொழிச்சொற்களையும் எடுத்தாள்வதில் பெரும் சிக்கல் இல்லைதானே. ஏன் அவர்கள் வளரவில்லையாம்? தமிழைப் பற்றியும், தொல்காப்பியர், நன்னூலார் பற்றியும் நீங்கள் கூறிய கருத்துகளை நீங்கள் மீள்பார்வை இட உங்களுக்கு நல்வாய்ப்புகள் வர வேண்டுகிறேன். சமசுக்கிருதம் உங்களுக்குப் பிடித்திருந்தால், கட்டாயம் சமசுக்கிருத விக்கி உள்ளது அங்கு சென்று நீங்கள் தொண்டாற்றுங்கள். அல்லது சமசுக்கிருத நூல்கள் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் இங்கு தமிழ் விக்கியில் வளமான கட்டுரைகள் எழுதுங்கள். தமிழில் எதைப்பற்றி வேண்டுமானாலும், எவ்வளவு ஆழ அகல நுட்பங்களுடன் மிக நேர்த்தியாய் எழுத இயலும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். --[[பயனர்:செல்வா|செல்வா]] 15:14, 2 ஜூலை 2009 (UTC)
Return to the project page "மொழி நடை வழிகாட்டி".