விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ginger (பேச்சு | பங்களிப்புகள்)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 120:
 
::: இஞ்சியரே...[[அறிவியல் எழுத்து]], [[நுட்ப எழுத்து]] என்றெல்லாம் உண்டு. எங்கெங்கு எது பொருந்துமோ, அதைப் பயன்படுத்த வேண்டும். இங்கு எத்தனையோ பேர் நல்ல தமிழில் எழுத வேண்டும் என்று கருத்து தெரிவித்திர்ருக்கிறார்கள். அதை மட்டும் எப்படி பொருட்படுத்தாமல் இருப்பது ஏன். அதெப்படி நீங்கள் மட்டும் செய்வது திணிப்பு போல் தெரியவில்லையா. உங்களுக்கு மட்டும் அருகதை உண்டு போலும். எதோ "மக்கள்" எம் பக்கம் என்று அரசியல் வாதிகள் போல. தமிழின் நீண்ட வரலாற்றின் அது மணப்பிரவாளத் திணிப்பில் இருது மீண்டதை மறந்திவிட முடியுமா. ஆமா, இனிமே ஆங்கிலேயர்கள் இந்தியாவை புதுமைப்படுத்த அடிமைப்படுத்தினார்கள் என்பது போல. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 01:20, 3 ஜூலை 2009 (UTC)
 
ஜிஞ்சர் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தாங்கள் இத்தளத்தை நன்கு முன்பே அறிந்தவர், எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள், என்னைப் போல முட்டி மோதி, விழுந்து.... வந்தவர் இல்லை. இத்தளத்தில நிறை, குறை இருக்கும், இருக்கின்றது, இத்தளத்தின் நிறை என்பதே இந்த குறைந்த பட்ச செயல் திட்டமான எளிய, அனைவருக்கும் புரிகின்ற.....கலப்பில்லாத தமிழில் என்ற திட்டமே. இது வேண்டாம் என்கிறீர்கள் அவரவர் இட்டத்துக்கு எழுதலாம் இந்த விதிமுறை தேவையில்லை. சரி அதையே அமல் படுத்தினால் என்று உதாரணத்திற்கு வைத்துகொள்வோம் நான் ஒரு கட்டுரை '''நியுரம்பர்க் தீர்ப்பாயம்''' என்று எழுதுகின்றேன் இதை வழக்கு சொல் '''டிரிபியுனல்''' ஆங்கில ஒலிபரப்பு சொல்தான் இருக்கவேண்டும் என்று நீங்களே பேச்சு பக்கத்தில் குறிப்பிட்டால் அல்லது தலைப்பையே மாற்றினால், நானும் மீண்டும் வலிந்து மாற்றுகின்றேன். மீண்டும் வேறொரு பயனர் ஜிஞ்சர் சொல்வது சரிதான் மீண்டும் மாற்றினால் என் செய்வது. ஒன்று நான் மிக வலிந்து சர்ச்சையிடுவேன் அல்லது தளத்தை விட்டு வெளியேறுவேன். சரி வெளியேறினால் வெளியேறட்டும் என்றால் தங்களுக்கும் இதே மாதிரி திருத்தங்கள் சர்ச்சைகள் எழும். இத்தளம் முழுக்க இது மாதிரி பல கலவர சர்ச்சைகள் எழுந்து ஒரு குறிப்பிட்ட பங்களிப்பாளர்கள் வெளியேறிவிடுவார்கள் அல்லது தினமும் சர்ச்சைகள் நடந்து கொண்டேயிருக்குமே. எல்லோரும் வெளியேறிவிட்டால் இருக்கும் குறைந்த பயனர்களை வைத்து எப்படி குறைந்த பட்ச இலக்கையாவது, இந்த தளம் எப்படி எட்டும். யார் இதற்கு முன்வருவர், (சீர்செய்ய,பக்கவழிப்படுத்த, பகுப்பு, இத்யாதி....). வெளியிலும் இதுபற்றி வெகுவாக விமர்சிக்கப்படுமே. இப்பொழுது மட்டும் விமர்சனம் இல்லையா? உண்மைதான். இதைவிட மோசமாக இருக்கும் எனபதுதான். அதற்கு குறைந்தபட்ச செயல் திட்டம் என்பது வேண்டிய ஒன்றுதான் (இதை விதி, செயல் திட்டம், மொழி நடை எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.) என்பது கருத்து. இதில் எது தீர்க்கமானது என்பதை தாங்களே........ இத்தளத்திற்கு பிறரை அணுக வைக்க, இழுக்க இந்த சிறப்பை சொல்லித்தான் இழுக்க முடியும். பங்களிப்பாளர்களையும் இடம் பெறச் செய்ய ஒரளவுக்காவது முடியும். நான் வரக்கூடாது என்றிருந்தேன் இருந்தாலும்......--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 12:28, 3 ஜூலை 2009 (UTC)
 
== நல்ல தமிழ் வழிகாட்டி - திஸ் இஸ் நோன்நன்சு ==
Return to the project page "மொழி நடை வழிகாட்டி".