விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 123:
ஜிஞ்சர் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தாங்கள் இத்தளத்தை நன்கு முன்பே அறிந்தவர், எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள், என்னைப் போல முட்டி மோதி, விழுந்து.... வந்தவர் இல்லை. இத்தளத்தில நிறை, குறை இருக்கும், இருக்கின்றது, இத்தளத்தின் நிறை என்பதே இந்த குறைந்த பட்ச செயல் திட்டமான எளிய, அனைவருக்கும் புரிகின்ற.....கலப்பில்லாத தமிழில் என்ற திட்டமே. இது வேண்டாம் என்கிறீர்கள் அவரவர் இட்டத்துக்கு எழுதலாம் இந்த விதிமுறை தேவையில்லை. சரி அதையே அமல் படுத்தினால் என்று உதாரணத்திற்கு வைத்துகொள்வோம் நான் ஒரு கட்டுரை '''நியுரம்பர்க் தீர்ப்பாயம்''' என்று எழுதுகின்றேன் இதை வழக்கு சொல் '''டிரிபியுனல்''' ஆங்கில ஒலிபரப்பு சொல்தான் இருக்கவேண்டும் என்று நீங்களே பேச்சு பக்கத்தில் குறிப்பிட்டால் அல்லது தலைப்பையே மாற்றினால், நானும் மீண்டும் வலிந்து மாற்றுகின்றேன். மீண்டும் வேறொரு பயனர் ஜிஞ்சர் சொல்வது சரிதான், விக்கி திட்டப்படி செயல்படுகின்றார் மீண்டும் மாற்றினால் என் செய்வது. ஒன்று நான் மிக வலிந்து சர்ச்சையிடுவேன் அல்லது தளத்தை விட்டு வெளியேறுவேன். சரி வெளியேறினால் வெளியேறட்டும் என்றால் தங்களுக்கும் இதே மாதிரி திருத்தங்கள் சர்ச்சைகள் எழும். இத்தளம் முழுக்க இது மாதிரி பல கலவர சர்ச்சைகள் எழுந்து ஒரு குறிப்பிட்ட பங்களிப்பாளர்கள் வெளியேறிவிடுவார்கள் அல்லது தினமும் சர்ச்சைகள் நடந்து கொண்டேயிருக்குமே. எல்லோரும் வெளியேறிவிட்டால் இருக்கும் குறைந்த பயனர்களை வைத்து எப்படி குறைந்த பட்ச இலக்கையாவது, இந்த தளம் எப்படி எட்டும். யார் இதற்கு முன்வருவர், (சீர்செய்ய,பக்கவழிப்படுத்த, பகுப்பு, இத்யாதி....). வெளியிலும் இதுபற்றி வெகுவாக விமர்சிக்கப்படுமே. இப்பொழுது மட்டும் விமர்சனம் இல்லையா? உண்மைதான். இதைவிட மோசமாக இருக்கும் எனபதுதான். அதற்கு குறைந்தபட்ச செயல் திட்டம் என்பது வேண்டிய ஒன்றுதான் (இதை விதி, செயல் திட்டம், மொழி நடை எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.) என்பது கருத்து. இதில் எது தீர்க்கமானது என்பதை தாங்களே........ இத்தளத்திற்கு பிறரை அணுக வைக்க, இழுக்க இந்த சிறப்பை சொல்லித்தான் இழுக்க முடியும். பங்களிப்பாளர்களையும் இடம் பெறச் செய்ய ஒரளவுக்காவது முடியும். நான் வரக்கூடாது என்றிருந்தேன் இருந்தாலும்......--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 12:28, 3 ஜூலை 2009 (UTC)
:செல்வம்தமிழ் , நீங்கள் சொல்வது போல் “.....கலப்பில்லாத தமிழில் என்ற திட்டமே. இது வேண்டாம் என்கிறீர்கள் ” என திட்டவட்டமாக நான் சொல்லவே இல்லை. பொதுவாக தமிழர்கள் நல்ல ஊடங்களிலும், இலக்கியத்திலும், அரசு ஆவணங்களிலும் பயன்படுத்துவதை நாம் புறக்கணிக்கக் கூடாது. அதைத் தான் திருப்பிச் சொல்வேன். இங்கே தமிழ் விக்கி என்றாவுடன், எதோ புது உலகம், தமிழ் உரைநடைக்கு அப்பாற்பட்ட உலகம், வழக்கில் இல்லாத உலகம் போல் இங்கே ஒரு எண்ணம் நிலவுகிறது. சில சமயம், அதை நேரிடையாக சொல்கின்றனர், சில சமயம் “கலைக்களஞ்சியம்”, “எளிய தமிழ்” என்ற போர்வையில் அதையே செய்கின்றனர். மற்றவர்கள் இந்த எண்ணத்தில், உடன்பாடு இல்லை என்றால், தமிங்கிலம் ஊக்குவிக்கிறார் என்ற அவதூறு பரப்பப் படுகிறது. இது வரை நல்ல உரைநடைக்கு தமிழ்+ஆங்கிலத்தில் “நடைக் கையேடு”ம், ஆங்கிலத்தில் நடைக் கையேடும், சிறப்புக் கட்டுரைத் தகுதரமும், அதை அடைவதற்கான வெகு விளக்கமான பயிற்சிப் பக்கங்களும் உள்ளன. அங்கு எங்கும் கிரந்தம் எதிர்பு, பிறமொழி மூல சொற்கள் களைவது போன்ற ஐடியாக்கள் இல்லை. --[[பயனர்:Ginger|Ginger]] 12:48, 3 ஜூலை 2009 (UTC)
 
உண்மைதான் அரசு ஆவணங்களில் பல யொழிபெயர்க்கப்பட்வில்லை இதற்கு தனி ஆணையம் உருவாக்கப்பட்டது ஆட்சி மாற்றங்களும் இடையேயிடையே நடந்த்தால் மொழி பெயர்க்க இயலவில்லை அரசின் கொள்கையும் அதுதான் இன்னும் பல ஆங்கிலத்தளங்கள் மொழி பெயர்ப்பு கட்டுமானத்தில் உள்ளன. இதற்காக முனைவர் மா.நன்னன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது என அறிகின்றேன். எல்லாமே தமிழில் வரவேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையும் பத்திரிகையில் படித்தது. வழிமுறை, நடை வழி ... என்பது இல்லையென்றால் ஒருவர் இதுதான் சரி அதுதான் சரி எனபர். அது எல்லா கட்டுரையளருக்கு சிக்கல். இதில் நீங்கள் கூறவேண்டிய கிரந்தம் அது பற்றிய கொள்கை அது எப்படி எடுத்துக்கொள்ளப்படவேண்டும், என்பதையும் வேறு முறைகள் ஏதாவது உங்கள் திட்டங்கள், ஆலோசனைகள், கருத்துக்கள்...... இங்கே பதியலாமே.
 
நிலப்பரப்பிற்கேற்ப வழக்குச் சொல்லும் மாறும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் ஒரேமாதிரியான பொதுவான தமிழ் உரைநடைச் சொல் என்று வைத்திருப்பார்கள் என அறிகின்றேன். கிரந்தம் பற்றி நான் கூறவில்லை. அது இன்னும் தீர்வு காணப்படவில்லை. அது பற்றி என் விளக்கம் ஏற்கனவே கூறிவிட்டேன். தமிழக அரசின் கொள்கையில் தான் உள்ளது, நமது பாடத்திலும் கிரந்தம் அனுமதிக்கப்பட்டது தான். அதை இப்பொழுது எடுத்தால் சர்ச்சைதான் வரும். எளிய தமிழ், கலப்பில்லாத தமிழ் உங்கள் உடன்பாட்டுக்கு ஒத்துவருவது தான் என அறிகின்றேன். எளிய தமிழ் என்பது நமது பாடநூல்களில் உள்ளதுதான். சில இடங்களில் தவறுகள் இருக்கும் இங்கு அதை திருத்திக் கொள்ளலாம். வேண்டுமானால் அடைப்பு குறிக்குள் நீங்கள் விரும்பிய சொல்லையும் உள்ளிட்டு கொள்ளுங்களேன் தேவைப்படீன். இதற்கு ஒரு இணக்கமான முடிவு வரவேண்டும் அதுவே என் அவா. இனிமேல் நாம் படிக்கப்போவதில்லை நம் எதிர்கால சந்ததியினருக்காக சிலவற்றை.......வி........கொ மேலே கூறியவையும் கருத்துதான் நீங்கள் எது வேண்டும் என்பதை குறிப்பிடுங்கள் அல்லது பதியுங்கள்.நன்றி--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 14:19, 3 ஜூலை 2009 (UTC)
 
== நல்ல தமிழ் வழிகாட்டி - திஸ் இஸ் நோன்நன்சு ==
Return to the project page "மொழி நடை வழிகாட்டி".