விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 203:
 
:::Ginger, நீங்கள் மிகப்பல இடங்களில் -கிரது என்று எழுதி தமிழ் விக்கிப்பீடியா தளத்தைப் பிழைகள் மிகுந்த, பிழைகள் மலிந்த தளமாக மாற்றி வருகின்றீர்கள். நான் உள்பட எல்லோரும் எழுத்துப்பிழைகள் விடுகிறோம்தான், ஆனால் நீங்கள் தமிழை இப்படி இழிவுபடுத்துமுகமாக தாறுமாராக எழுதுவதை முதலில் மாற்ற வேண்டுகிறேன். தமிழில் கட்டுரை நடையில் எழுதும் பொழுது திருந்திய, சரியான முறையில் எழுதுதல் வேண்டும். இது ஆங்கிலம் உட்பட பல மொழிகளிலும் உள்ள வழக்கு. பேசுவது போலவே எழுதுதல் இல்லை. பேச்சு மொழி பல வகையாக இருக்கும், அது ஆளுக்கு ஆளும், குழுவுக்குக் குழுவும், இடத்துக்கு இடமும், காலத்துக்கு காலமும் மாறக்கூடும் (மாறுவது இயல்பு). கலைக்களஞ்சியம் போன்றவை சீரிய எழுத்து இலக்கியம். ஆகவே இதில் பொதுவாக எல்லாத் தமிழர்களும் (இடம், குழு என்றில்லாமல்) புரிந்துகொள்ளுமாறும் ஓரளவுக்குக் காலம் கடந்து நிற்பதாகவும் இருக்குமாறு எழுத வேண்டும். நீங்கள் தமிழ்மொழியை வழிவழியாய் நிறுவி, வரையறுத்து வந்த பேரறிஞர்கள் தொல்காப்பியர், நன்னூலார் ஆகியவர்களையே மதிக்காத்தனமாகப் பேசுகின்றீர்கள். தமிழையும் தமிழர் பண்பாடுகள், வழகாறுகளையும் மிக இழிவாகப் பேசுகின்றீர்கள் ("ஓரங்கட்டு"). எம்மொழியும் அதன் இலக்கணங்கள், இயல்புகளை ஒத்தே இயங்கும். தமிழ்மொழி, செவ்விய இலக்கணம், இலக்கியங்கள் கொண்டுள்ளதாலும், அவற்றை வழிவழியாய்த் தமிழர்கள் பின்பற்றியதாலும், தமிழ் இன்றும் செவ்விய வாழ்மொழியாக வாழ்கின்றது. தமிழ் மொழியைப் பற்றியும், தமிழர்களின் முன்னோர்களையும் இகழ்ந்து பேசும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். நீங்கள் வேற்றுமொழிச்சொற்களைப் பயன்படுத்துவது பற்றிக் கூறுகின்றீர்கள். அவை தமிழ் மொழியின் அடி வேர்களையே அழிக்கின்றது என்பதை உணரவில்லை. மரங்களை வெட்டினால் காடு அழியும் என்பது உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம் ஆனால் பலருக்குப் புரிகின்றது. கடைசியாக "தமிழ்" என்பது சமசுக்கிருதத்தில் அவர்கள் மொழியில் சொல்ல இயலாததால், "த்ரமிள, த்ரமிட" என்றாகி "த்ரவிட" ஆகியது. அது தமிழ்தான். திராவிட என்னும் சொல் இன்று வேறுபொருளில் வழங்குகின்றது.--[[பயனர்:செல்வா|செல்வா]] 23:45, 4 ஜூலை 2009 (UTC)
 
கிரது, கிரது சற்று எரிச்சலை தந்தாலும் அது தட்டச்சினால் வந்த பிழை அல்லது அவரது பேச்சு வழக்கு என்று கூறுவார் அதை வலியுறுத்த முடியாது. அப்படி பார்த்தால் ஆங்கிலத்தில் உரையாடுவது கூட தவிர்க்கப்படவேண்டியது தான். பேச்சு பக்கத்தில் இதை முன்னிருத்தமுடியாது. கட்டுரையில் தவிர்க்க சொல்லலாம். பல இடங்களில் அப்படித்தான் வருகின்றது. இதை தவிர்த்து தட்டச்சு செய்தால் அனைவருக்கும் புரியும்.--[[பயனர்:Bpselvam|செல்வம் தமிழ்]] 05:37, 5 ஜூலை 2009 (UTC)
Return to the project page "மொழி நடை வழிகாட்டி".