அசிட்டிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
}}
}}
'''அசிட்டிக் காடி''' (''Acetic acid''), CH<sub>3</sub>COOH என்னும் வேதியியல் வாய்பாடு கொண்ட, ஒரு [[கரிமக் காடி]] (organic acid). இது '''எத்தனாயிக் காடி''' அல்லது '''அசிட்டிக் அமிலம்''' என்றும் அழைக்கப்படும். இது கடல் நீரிலும், எண்ணெய்க் கிணறுதோண்டும் இடங்களில் காணப்படும் உவர்நீரிலும் (brine), மிகச்சிறிதளவு மழைநீரிலும், [[இம்மியப் பொருள்|இம்மியப் பொருளாக]] [[நிலைத்திணை]], உயிரினங்களின் உடலில் காணப்படும் நீர்மப்பொருளிலும் காணப்படுகின்றது. உயிரிகளின் உடலியக்கத்தில், இன்றியமையாத ஆற்றல் கடத்துமுறைகளில்(energy pathways) இது பயன்படுகின்றது <ref>Wagner Jr., Frank S, Acetic Acid, Kirk‑Othmer Encyclopedia of Chemical Technology, pp-115-136</ref>. அசிட்டிக் காடி நாவில் எரியும் உணர்வும், சுருக்கென்று மூக்கைத் துளைக்கும் கடுமையான நெடியும் கொண்ட நிறமற்ற ஒரு [[நீர்மம்]]. மேற்குலக வாழ்க்கையில் பொதுவாக வீடுகளில் பயன்படும் [[வினிகர்]](vinegar) எனப்படும் ஒருவகைப் புளிமத்தன்மை உடைய [[சாராயம்]] போன்ற பொருளின் புளிப்புத்தன்மைக்கும், கடுமையான நெடிக்கும், அதில் உள்ள இந்த அசிட்டிக் காடியே காரணம். பழம் அல்லது காய்கறிகளின் சாற்றைஇ நொதிக்க விட்டால் அதிலிருந்து பெறும் 2-10% அசிட்டிக் காடி கொண்ட நீர்மத்தை ''வினிகர்'' என்பர். நீரற்ற தூய அசிட்டிக் காடி (இதனை "கிளேசியல் அசிட்டிக் காடி" என்றும் அழைப்பர்) நிறமற்ற [[நீர்மம்]]; இது சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரை உறிஞ்சிக்கொள்ளும். அசிட்டிக் காடி 16.7&nbsp;[[செல்சியசு|°C]] (62&nbsp;[[பாரன்ஃகைட்|°F]]) இல் நிறமற்றப் படிகமாக உறைந்து [[திண்மம்|திண்மமாகும்]]. இது மென்வலுவான [[காடி]], அதாவது [[நீர்|நீரில்]] குறைந்த அளவே பிரிவுற்றுக் கரைந்து காடித்தன்மை தரும் பொருள்.
 
[[கார்பாக்சைலிக் காடி]] (carboxylic acid) என்னும் வகையான காடிகளைச் சேர்ந்த இது அவற்றில் மிகவும் எளிய ஒரு காடி. இது தொழிலகங்களில் பயன்படும் ஒரு முக்கியமான வேதிப்பொருள். பலவகையான சாராயமல்லா நீர்ம குடியுணவுகள் விற்கப்படும் கொள்கலன்கள் (புட்டிகள், பாட்டில்கள்) செய்வதில் பயன்படும் [[பாலியெத்திலீன் டெரெப்தாலேட்]] (polyethylene terephthalate) என்னும் பொருளைச் செய்ய இது பயன்படுகின்றது. வீடுகளில் படிவுகள், கறைகளை நீக்கப் பயன்படுகின்றது. விற்கப்படும் உணவுப்பொருள்களில் இது காடித்தன்மையைக் கட்டுப்படுத்தும் [[உணவு சேர்ப்பி ஈ எண்|E260]] என்னும் எண் கொண்ட ஓர் [[உணவு சேர்ப்பி]]யாகப் பயன் படுகின்றது
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது