அசிட்டிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் [[பிணைவு வடிகை]](condensation reaction) என்னும் வேதி வினையின்படி [[அசிட்டிக் அன்ஐதரைடு]] உருவாகின்றது. அசிட்டிக் அன்ஐதரைடு படைப்பதற்காகப் பயன்படும் அசிட்டிக் காடி உலகளாவிய அளவில் அசிட்டிக் காடி உற்பத்தியில் ஏறத்தாழ 25% முதல் 30% ஆகும். அசிட்டிக் அன்ஐதரைடை அசிட்டிக் காடி இல்லாமலே [[மெத்தனால் கார்போனைல் ஆக்கம்]] என்னும் முறைப்படியும், காட்டிவா (Cativa) செய்முறைப்படியும் படைக்கமுடியும்.
 
[[Image:Acetic acid condensation.svg|412px|thumb|அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் [[பிணைவு வடிகை]] முறைப்படி ''அசிட்டிக் அன்ஐதரைடு'' உருவாகுதல்]]
 
அசிட்டிக் அன்ஐதரைடு வலுவான ஒரு அசிட்டைலாக்கும் கருவிப் பொருள். இதன் முதன்மையான பயன்பாடு செயற்கை நெசவாலைகளில் பயன்படும் செல்லுலோசு அசிட்டேட் என்னும் பொருளைச் செய்வதாகும். ஒளிப்படக்கலைத் துறையிலும் ஒளிப்படப் படலத்தில் (photographic film) இது பயன்படுத்தப்படுகின்றது. ஆசுப்பிரின் (aspirin), [[எரோயின்]](heroin) முதலான மருந்துகள் செய்யவும் பிர சேர்மங்கள் உருவாக்கவும் அசிட்டிக் அன்ஐதரைடு பயன்படுகின்றது..
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது