அசிட்டிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 91:
ஆனால் பெரும்பாலான எசுத்தர்கள் அசிட்டால்டிஃகைடில் (acetaldehyde) இருந்து [[டிசென்க்கோ வினை]] (Tishchenko reaction) எனப்படும் வேதியியல் வினையால் கிடைக்கின்றன. மேலும் ஈத்தர் அசிட்டேட்டுகள் நைட்ரோசெல்லுலோசு ஆக்ரலிக் நிறச்சாயம், வார்னிசு நீக்கி, மரச்சாயம் முதலியவற்றின் கரைப்பான்களகாகப் பயன்படுகின்றன. முதலில் [[எத்திலீன் ஆக்சைடு]] அல்லது [[புரோப்பிலீன் ஆக்சைடு|புரோப்பிலீன் ஆக்சைடில்]] இருந்து [[கிளைக்கால் ஒற்றையீத்தர்]]கள் விளைவிக்கப்படுகின்றன, பின்னர் அவைஆசிட்டிக் காடியுடன் சேர்ந்து எசுத்தராக்கம் செய்யப்படுகின்றன. மூன்று முக்கிய விளைபொருள்களாவன: எத்திலீன் கிளைகால் மோனோயெத்தில் ஈத்தர் அசிட்டேட் (EEA), எத்திலீன் கிளைக்கால் மோனோபியூட்டைல் ஈத்தர் அசிட்டேட் (EBA), புரோப்பிலீன் கிளைக்கால் மோன்னோயெத்தில் ஈத்தர் அசிட்டேட் (PMA). இப்பயன்பாடுகளுக்காக உலகளவில் 15% முதல் 20% அசிட்டிக் காடி செலவாகின்றது. ஈத்தர் அசிட்டேட்டுகள், எடுத்துக்காட்டாக EEA, மாந்தர் இனப்பெருக்கத்துக்குக் கேடுவிளைவிக்கக் கூடியது<ref name='suresh'/>.
 
===அசிட்டிக் அன்ஐதரைடு (நீரற்ற அசிட்டிக்கு)===
இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் [[பிணைவு வடிகை]](condensation reaction) என்னும் வேதி வினையின்படி [[அசிட்டிக் அன்ஐதரைடு]]அல்லது ''நீரற்ற அசிட்டிக்கு'' உருவாகின்றது. இந்த பிணைவு வடிகை வேதி வினையின் வழி நீர் மூலக்கூறு விலகி வெளிப்படுவதால் இதனை "வடிகை" (இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைவுறும் பொழுது ஏற்படும் நீர்வடிகை) என்கிறோம். நீரற்ற அசிட்டிக்கு (அசிட்டிக் அன்ஐதரைடு) படைப்பதற்காகப் பயன்படும் அசிட்டிக் காடி உலகளாவிய அளவில் அசிட்டிக் காடி உற்பத்தியில் ஏறத்தாழ 25% முதல் 30% ஆகும். அசிட்டிக் அன்ஐதரைடை அசிட்டிக் காடி இல்லாமலே [[மெத்தனால் கார்போனைல் ஆக்கம்]] என்னும் முறைப்படியும், காட்டிவா (Cativa) செய்முறைப்படியும் படைக்கமுடியும்.
 
[[Image:Acetic acid condensation.svg|412px|thumb|இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் [[பிணைவு வடிகை]] முறைப்படி ''நீரற்ற அசிட்டிக்கு'' எனப்படும் ''அசிட்டிக் அன்ஐதரைடு'' உருவாகுதல்]]
 
அசிட்டிக் அன்ஐதரைடு வலுவான ஒரு அசிட்டைலாக்கும் கருவிப் பொருள். இதன் முதன்மையான பயன்பாடு செயற்கை நெசவாலைகளில் பயன்படும் செல்லுலோசு அசிட்டேட் என்னும் பொருளைச் செய்வதாகும். ஒளிப்படக்கலைத் துறையிலும் ஒளிப்படப் படலத்தில் (photographic film) இது பயன்படுத்தப்படுகின்றது. ஆசுப்பிரின் (aspirin), [[எரோயின்]] (heroin) முதலான மருந்துகள் செய்யவும் பிற [[சேர்மம்|சேர்மங்கள்]] உருவாக்கவும் அசிட்டிக் அன்ஐதரைடு பயன்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது