புரோப்பிலீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு (உருவாக்கம்)
விரிவு (உற்பத்தியும் பயன்பாடும்)
வரிசை 54:
==உருவாக்கம்==
புரோப்பீனை பெட்ரோலியம் (கல்நெய்) அல்லது மண்ணடிவளிமத்தில் (natural gas) இருந்து பெறலாம். மீளுருவாகாத, புதுப்பிக்கமுடியாத தொல்லுயிர் அழிவுகளில் இருந்து பெறும் எரிபொருள்களில் இருந்து பெறப்படுக்ன்றது. வடித்துப் பகுத்தல் (fractional distrillation) வழி எண்ணெய்த் தூய்மைப்படுத்துத் தொழிலகங்களில் புரோப்பீன் பிரித்தெடுக்கப்படுகின்றது. புரோப்பீனின் தேவை, அது கிடைக்கும் அளவை விஞ்சி உள்ளது, ஆகவே நீளமான பிற ஐதரோகார்பன் பொருள்களில் இருந்து கரிம-கரிம பிணைப்புகளைப் வேதி முறையில் பகுத்துப் புரோப்பீனைப் பெறுகின்றனர்.
 
==உற்பத்தியும் பயன்பாடும்==
பல்வேறு பணிகளுக்குப் பயன்படும் பாலிமராகிய பாலிபுரோப்பிலீன் செய்ய புரோப்பீன் அடிப்பொருளாகப் பயன்படுகின்றது. பெரும்பாலான புரோப்பீன் [[சீக்லர்-நட்டா வினையூக்கி]] (Ziegler-Natta catalyst) இயக்கம் வழி பல்லுருவாக்கம் (polymerization) செய்யப்பட்டு பாலிபுரோப்பிலீன் ஆக்கப்படுகின்ரது. தொழிலகங்களில் [[அசிட்டோன்]], [[ஃவினால்]](phenol) முதலியவை பெருமளவில் படைக்கப் பய்னபடும் குயூமீன் படிசெய்முறையில் உள்ளிடு பொருளாகப் பயன்படும் [[பென்சீன்|பென்சீனோடு]] சேர்ந்த மற்றொரு பொருள் புரோப்பீன். பிற வேதிப்பொருளான [[ஐசோபுரோப்பனால்]], [[ஆக்ரிலோநைட்ரைல்]], [[புரோப்பிலீன் ஆக்சைடு]] (ஈப்பாக்ஃசிபுரோப்பேன்) ஆகியவற்றைப் படைக்கவும் புரோப்பீன் பயன்படுகின்றது<ref>{{Citation | contribution = 8034. Propylene | year = 1996 | title = The Merck Index, Twelfth Edition | editor-last = Budavari | editor-first = Susan | volume = | pages = 1348–1349 | place = New Jersey | publisher = Merck & Co. | id = }}</ref>
 
புரோப்பீன் படைப்பளவு 2000-2008 ஆண்டுகளில் ஏறத்தாழ 35 [[மில்லியன்]] [[டன்]]கள் அளவிலேயே ([[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] மட்டும்) நிலையாக உள்ளது, ஆனால் கிழக்கு ஆசியாவிலும், குறிப்பாக சிங்கப்பூரில் படைப்பளவு கூடிக்கொண்டு வருகின்றது<ref>www. petrochemistry.net Accessed August 2008</ref><ref>Organic Chemistry 6th edition, McMurry,J., Brooks/Cole Publishing, Pacific Grove USA (2005)</ref>. உலகில் புரோப்பீனின் மொத்த படைப்பளவு தற்பொழுது ஏறத்தாழ [[எத்திலீன்|எத்திலீனின்]]] படைப்பில் பாதி.
 
[[பகுப்பு:கரிம வேதிப்பொருள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புரோப்பிலீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது