கழுவு கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
==வடிவமைப்பு==
கழுவு கிண்ணங்கள் அவை பயன்படும் சூழல், செயற்பாட்டுத் தேவைகள், உள்ளக அழகூட்டற் தேவைகள் என்பவற்றுக்கு இணங்கப் பல வடிவமைப்புக்களில் செய்யப்படுகின்றன. நிலத்தில் பொருத்தப்படும் வகையில் காலோடு கூடிய கிண்ணங்களும், சுவரில் பொருத்தத்தக்க கிண்ணங்களும் உள்ளன. பிற மேற்பரப்புக்களின் மேல் வத்துப் பொருத்தும்படியான விளிம்புகளுடன் கூடிய கிண்ணங்களும், அத்தகைய மேற்பரப்புகளுக்கு அடியில் பொருத்தக்கூடிய விளிம்பற்ற கிண்ணங்களும் விற்பனைக்கு உள்ளன. வேலைப்பரப்புகளுடன் சேர்த்து ஒரே செய்பொருளினால் ஆக்கப்படும் கிண்ணங்களும் உள்ளன. தற்காலத்தில் முற்றிலுமாகவே வேலை மேற்பரப்பின் மேல் பொருத்தப்படும் கிண்ணங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
முன்னர் கூறியபடி பயன்படவுள்ள நீர்வாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கிண்ணங்கள் அவற்றைப் பொருத்துவதற்காக அமைந்த ஒன்று, இரண்டு அல்லது மூன்று துளைகளுடன் செய்யப்படுகின்றன. சில கிண்ணங்களில் [[சவர்க்காரம்]] வைப்பதற்கான இடமும் கிண்ணத்திலேயே அமையும்படியும் வடிவமைக்கப்படுவது உண்டு.
 
இவற்றைவிடப் பல்வேறு நிறங்களிலும், வடிவங்களிலும் கழுவுகிண்ணங்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. புதிய பிளாஸ்டிக்குச் செய்பொருட்களின் வருகையினால் ஒளிபொருந்திய பல நிறங்களில் கழுவு கிண்ணங்களை உருவாக்குவது இயலுமானதாகி உள்ளது. அத்துடன் [[கழிப்பறை]]களில் பொருத்தப்படுகின்ற பிற பொருத்து பொருட்களுடன் பொருத்தமாக அமையும் பொருட்டு கழுவு கிண்ணங்களும் அவற்றுடன் சேர்த்து ஒரே தொகுதியாக அமையும்படி வடிவமைக்கப்படுவதும் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/கழுவு_கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது