எம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிகழ்வின் பின்புலம்: சான்று வார்ப்புரு
வரிசை 33:
1968 இறுதியில் இராதாவிற்கு [[திருச்சி]]யில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான ''தூக்குமேடை'', ''[[ரத்தக்கண்ணீர்]]'', ''லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'' ஆகிய நாடகங்களின் தொகுப்பாக ''கதம்பம்'' என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
[[மு. க. முத்து]] நடிப்பில் வந்த ''சமையல்காரன்'' என்ற திரைப்படத்திலும் பின்னர் [[ஜெய்சங்கர்|ஜெய்சங்கருடன்]] நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் [[இந்திரா காந்தி]] அரசின் [[நெருக்கடி நிலை]] அறிவிப்பின்பின் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம்]] மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக [[பெரியார்|பெரியாருடன்]] தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.
 
அதன்பின் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] [[மலேசியா]]விலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு [[மஞ்சள் காமாலை]] நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு [[செப்டம்பர் 17]]-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்_கொலை_முயற்சி_வழக்கு,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது