மாட்டு வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ms:Kereta lembu
சி விக்கி ஊடக நடுவ இணைப்பு - இந்திய மாட்டுவண்டி]]
வரிசை 1:
[[Image:Bullock cart mohenjo-daro.jpg|right|225px|thumb|மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட மாட்டுவண்டிப் பொம்மை.]]
[[Image:Bullockcart.jpg|right|225px|thumb|மாட்டு வண்டிப் பயனம்]]
[[Image:Bullockcart Sri Lanka.JPG|right|225px|thumb|[[இலங்கை]] மாட்டுவண்டி ஒன்று ([[திருகோணமலை|திருகோணமலையில்]]) மாட்டுவண்டி]]
[[Image:Bullock cart-INDIA-Tamil word26.jpg|right|225px|thumb|[[இந்தியா|இந்திய]] மாட்டுவண்டி]]
[[Image:Bullockcart.jpg|right|225px|thumb|மாட்டு வண்டிப் பயனம்பயணம்]]
 
'''மாட்டு வண்டி''' என்பது [[மாடு]]களின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இத்தகு வண்டிகள் பெரும்பாலும் [[இலங்கை]] மற்றும் [[இந்தியா|இந்தியப்]] பகுதிகளில் காணப்படும். இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றன. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.
வரி 7 ⟶ 9:
கயிற்றின் உதவியுடன், மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். வண்டியினை ஓட்டிச் செல்பவர் வண்டியின் முற்பகுதியில் அமர்ந்திருப்பார். பண்டங்கள் பின் பகுதியில் ஏற்றப்பட்டிருக்கும். பிற பயனிகளும் பின் பகுதியில் அமரலாம். ஓட்டுனர் அமர்ந்தவாறு இருப்பதே பொது. தேர்ந்த ஓட்டுனர்கள் இட நெருக்கடி காரணமாக, சில சமயங்கள் நின்றவாறே ஓட்டுவதும் உண்டு. பெரும்பாலும், ஆண்களே மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். எனினும், தேவை ஏற்படின் வேளாண் குடும்பத்துப் பெண்களும் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டி ஓட்டத் தெரியாத ஆண்களை காண்பது அரிது. வேளாண் குடும்பத்துச் சிறுவர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிப் பழகுவது மிதி வண்டி ஓட்டிப் பழகுவது போல் ஒரு குதூகலமானதும் பெருமிதம் தரக்கூடியதுமான அனுபவமாகும்.
 
 
[[Image:Bullock cart mohenjo-daro.jpg|right|225px|thumb|மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட மாட்டுவண்டிப் பொம்மை.]]
வண்டிமாடுகள், ஓட்டுனரின் எடையைத் தாண்டி பொருட்களை வண்டியின் பிற்பகுதியில் ஏற்ற மாட்டனர். மாடுகளை உந்தி ஓட்டிச் செல்ல ஓட்டுனர் பெரும்பாலும் தார்க்குச்சிகளை வைத்திருப்பார். தார்க்குச்சி என்பது நுனியில் (ஆணி) ஊசியும் [[சாட்டை]]யும் பொருத்தப்பட்ட [[பிரம்பு]]க் குச்சியாகும். மாடுகள் வேகம் குறையும்போது, சாட்டையால் அடித்தோ ஊசி கொண்டு குத்தியோ மாடுகளை வேகம் கொள்ளச் செய்வர். மாட்டின் வாலை திருகி வேகமூட்டுவதும் உண்டு. ஒரே வழியில் செல்லப் பழக்கப்பட்ட மாடுகள், ஓட்டுனர் இன்றி கூட குறித்த இடத்துக்கு தாமே வண்டியே இழுத்துச் செல்வதும் உண்டு. இவ்வாறு வண்டியிழுக்கப் பயன்படும் மாடுகள் அவற்றின் சிறு வயது முதலே இணையாக வளர்க்கப்படும். இவ்வாறு இணை சேர்க்கப்படும் மாடுகள் ஒரே உயரம், வளர்ச்சி உடையனவாக பார்த்துக் கொள்ளப்படும். [[பொலி காளை]]களை போன்றன்றி, இம்மாடுகளின் இனப்பெருக்க விதைப் பைகள் சிதைக்கப்பட்டே வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இல்லையெனில், இவற்றை கட்டுப்படுத்தி வண்டி இழுக்கப் பயன்படுத்துவது சிரமமாகும். நன்கு வளர்ந்த ஒன்றுக்கொன்று பழக்கப்படாத புதிய மாடுகளை வண்டி இழுக்கச் செய்வது கடினமாகும். வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும், இணை மாடு மற்றும் வண்டியின் செயல்பாட்டை புரிந்துகொள்வதற்கும் மாடுகளுக்கு போதுமான பயிற்சி தேவை. பயிற்சியற்ற மாடுகளை வண்டியில் பூட்டி இழுக்க இயலாது.
 
"https://ta.wikipedia.org/wiki/மாட்டு_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது