"தூக்கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(முன்னிருந்த படத்தை அதன் அறிவியல் பெயருடன் இணைத்தல்)
சி
'''டூக்கான்''' அல்லது '''பேரலகுப் பறவை''' (இலத்தீன் பெயர்:Ramphastidae) என்பது வெப்ப மண்டல அமெரிக்காவில் வசிக்கும் [[பறவை]]களைக் கொண்ட ஒரு [[குடும்பம் (உயிரியல்)|குடும்பமாகும்]]. இப்பறவைக் குடும்பத்தின் பறவைகள் கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும். இக்குடும்பத்தின் 5 [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களும்]] 40 [[இனம் (உயிரியல்)|இனங்களையும்]] கொண்டது. டுப்பி மொழியிலிருந்து இப்பெயர் மருவி வருகின்றது.
 
[[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]]வின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் [[குயிலும் பறவை இனம்|குயிலும் பறவை இனத்தைச்]] சேர்ந்தது. உயிரினவியலில் இப்பறவை ராம்ஃவாஸ்டிடேராம்ஃவாசிட்டிடீ (Ramphastidae) என்னும் பறவையின உட்பிரிவைச் சேர்ந்தது. ஏறத்தாழ 41 உள் இனங்கள் உள்ளன. இவைகளில் சுமார் 21 இனம் [[கொலம்பியா]] நாட்டிலும், சுமார் 17 இனங்கள் [[பிரேசில்]], [[வெனிசூலா]], [[ஈக்வெடார்]] போன்ற நாடுகளில் வாழ்கின்றன.
 
இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றார்போல தலையின் அலுகுப்புறம் பெரியதாகவும் இருக்கும். இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் [[நாக்கு]] குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும்.
21,062

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/410444" இருந்து மீள்விக்கப்பட்டது