விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{கொள்கை}}
ஓர் '''சீர்திருத்த அரங்கு அன்று'''
வரிசை 49:
 
கட்டுரை தலைப்புகளுக்கு நேரடியாகத் தொடர்புடைய, தரமான வெளி இணைப்புகளை மட்டும் அளவான எண்ணிக்கையில் தாருங்கள். இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களுக்கான இணைப்புக் கோவையாக விக்கிபீடியா திகழாது.
 
* ஓர் '''சீர்திருத்த அரங்கு அன்று'''
[[எழுத்துச் சீர்மை]], [[மொழிச் சீர்மை]] போன்றவற்றின்பால் தனிப்பட்ட விக்கிபீடியர்கள் பலருக்கு ஈடுபாடு இருக்கலாம். ஆனால், விக்கிபீடியாவின் அடிப்படைக் கொள்கையின்படி அதற்கென்று எந்த ஈடுபாடும் கிடையாது. பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழில் தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கருதலாம். இது சரியாகினும், தவறாயினும், [[யூனிகோடு]] நிர்வாக அமைப்பு, [[உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்]], [[தமிழ்நாடு அரசு]], [[இலங்கை அரசு]] முதலிய பிற அமைப்புகளிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, தமிழ் விக்கிபீடியாவில் ''முதலில்'' அறிமுகப்படுத்தக் கூடாது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் பொது வழக்கில் வந்தபின் இங்கு செயல்படுத்தலாம். சில சிக்கல்கள் மீடியாவிக்கி மென்பொருள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களினாலோ தமிழ் விக்கிபீடியாவிற்கு மட்டும் ஏற்படலாம். அவற்றிற்கான தீர்வை விக்கிபீடியர்கள் கூடி முடிவு செய்யலாம்.
 
==இவற்றையும் பார்க்கவும்==