முகலாயக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''முகலாயக் கட்டிடக்கலை''' என்பது 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் [[ம...
 
No edit summary
வரிசை 2:
 
==வரலாற்றுப் பின்னணி==
முகலாய மரபு 1526 ஆம் ஆண்டில் [[பேரரசர் பாபர்|பேரரசர் பாபருடன்]] தொடங்கியது. பாபர், [[இப்ராகிம் லோடி]]யை வென்றதை நினைவு கூருமுகமாக [[பானிப்பட்]] என்னுமிடத்தில் ஒரு [[மசூதி]]யைக் கட்டினார். இதே காலப் பகுதியில் டிஸ்ட் மொராபாத் என்னும் இடத்தில் உள்ள சம்பாலில் இன்னொரு மசூதியும் கட்டப்பட்டது. தொடக்க முகலாயக் கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டுகளாக இன்றும் நிலைத்திருக்கும் கட்டிடங்கள் [[பேரரசர் சேர் சா சூரி]] என்பவரின் காலப்பகுதியைச் சார்ந்தவை. இவர் 1540 தொடக்கம் 1545 வரையிலான ஐந்தாண்டு காலமே ஆட்சியில் இருந்தார். இவர் உண்மையில் ஒரு முகலாயரும் அல்லர். இக் காலக் கட்டிடங்களுள், தில்லிக்கு அருகில் உள்ள [[கிலா இ குகுனா]] (1541), [[போரியல் கட்டிடக்கலை]] சார்ந்த தில்லியின் [[பழைய கோட்டை, தில்லி|பழைய கோட்டை]], வங்காளதேசத்தின் [[டாக்கா]]வில் உள்ள [[லால் பாக், டாக்கா|லால் பாக்]] இன்றைய பாகிசுத்தானின் [[செலூம்]] என்னுமிடத்துக்கு அருகில் உள்ள [[ரோத்தாசு கோட்டை]] என்பவை அடங்கும். செயற்கை ஏரியொன்றின் நடுவில் அமைந்த மேடை ஒன்றின் மேல் [[எண்கோணம்|எண்கோண]] வடிவில் அமைக்கப்பட்ட இவருடைய சமாதிக் கட்டிடம், [[சாசாராம்]] (Sasaram) என்னும் இடத்தில் உள்ளது. இக் கட்டிடம் இவரது மகனான [[இசுலாம் சா சூரி]]யின் (கிபி 1545-1553) காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
 
==அக்பர் காலம்==
பேரரசர் அக்பர் (1556-1605) காலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவரது ஆட்சிக் காலப் பகுதியில் முகலாயக் கட்டிடக்கலைப் பாணி பெருமளவு வளர்ச்சி பெற்றது. குசராத்திலும் பிற இடங்களிலும் காணப்படுவது போல இவரது காலக் கட்டிடங்களில் முசுலிம், [[இந்துக் கட்டிடக்கலை|இந்து]] ஆகிய கட்டிடக்கலைகள் சார்ந்த கூறுகள் கசணப்படுகின்றன. 1500 களின் இறுதிப் பகுதியில், அக்பர், [[பத்தேப்பூர் சிக்ரி]] என்னும் அரச நகரைக் கட்டினார். இது [[ஆக்ரா]]வில் இருந்து 26 [[மைல்]]கள் (42 [[கிமீ]]) தொலைவில் உள்ளது. பத்தேப்பூர் சிக்ரியில் உள்ள பல கட்டிடங்கள் இவர் காலக் கட்டிடக்கலையின் பாணியைத் தெளிவாகக் காட்டுகின்றன.
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/முகலாயக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது