முகலாயக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
[[File:Humayun's mausoleum, Delhi.jpg|thumb|200px|அக்பரின் தந்தை உமாயூனின் சமாதி.]]
பேரரசர் அக்பர் (1556-1605) காலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவரது ஆட்சிக் காலப் பகுதியில் முகலாயக் கட்டிடக்கலைப் பாணி பெருமளவு வளர்ச்சி பெற்றது. குசராத்திலும் பிற இடங்களிலும் காணப்படுவது போல இவரது காலக் கட்டிடங்களில் முசுலிம், [[இந்துக் கட்டிடக்கலை|இந்து]] ஆகிய கட்டிடக்கலைகள் சார்ந்த கூறுகள் கசணப்படுகின்றன. 1500 களின் இறுதிப் பகுதியில், அக்பர், [[ஃபத்தேப்பூர் சிக்ரி]] என்னும் அரச நகரைக் கட்டினார். இது [[ஆக்ரா]]வில் இருந்து 26 [[மைல்]]கள் (42 [[கிமீ]]) தொலைவில் உள்ளது. பத்தேப்பூர் சிக்ரியில் உள்ள பல கட்டிடங்கள் இவர் காலக் கட்டிடக்கலையின் பாணியைத் தெளிவாகக் காட்டுகின்றன. அங்குள்ள பெரிய மசூதி சீரிய தோற்றமும், கட்டிடக்கலைத் தாக்கமும் கொண்டது. இந் நகரின் தெற்கு நுழைவாயில் மிகவும் பெயர் பெற்றது. அளவிலும், அமைப்பிலும் இந் நுழைவாயில் இந்தியாவில் உள்ள இது போன்ற வேறெந்த அமைப்புக்கும் ஈடாகக் கூடியது. முகலாயர்கள் பல கவர்ச்சியான சமாதிக் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். அக்பரின் தந்தையான [[உமாயூனின் சமாதி]]யும், [[சிக்கந்திரா]]வில் உள்ள [[பேரரசர் அக்பரின் சமாதி|அக்பரின் சமாதி]]யும் இவற்றுள் குறிப்பிடத் தக்கவை.
 
==சகாங்கீர்==
[[Image:Agra Itimad-ud-Daula 1ed.jpg|thumb|200px|ஆக்ராவில் உள்ள இத்திமாத் உத் தௌலாவின் சமாதி]]
[[பேரரசர் சகாங்கீர்]] (1605–1627) காலத்தில் முகலாயர் கட்டிடங்களில் இருந்து இந்துக் கூறுகள் முற்றாகவே மறைந்து விட்டன. லாகூரில் உள்ள இவர்காலத்துப் பெரிய மசூதி [[பாரசீகக் கட்டிடக்கலை]]ப் பாணியைத் தழுவியது. ஆக்ராவில் உள்ள 1628 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட [[இத்திமாத் உத் தௌலாவின் சமாதி]] முழுவதுமாக வெள்ளைச் சலவைக்கல்லால் ஆனது. இதன் மேற்பரப்பு முழுவதும் [[கல்லிழைப்பு]] (pietra dura)வேலைப்பாடுகளினால் மூடப்பட்டுள்ளது. இது இத்தகைய வேலப்பாடுகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக விளங்குகிறது. காசுமீரின் [[தால் ஏரி]]க் கரையில் அமைந்துள்ள [[சாலிமார் பூங்கா]]வும் அதனோடிணைந்த மண்டபங்களும் சகாங்கீரினால் கட்டப்பட்டவையே. இவர் தனது வளர்ப்பு விலங்கான மானொன்றுக்கும், பாகிசுத்தானில் உள்ள [[சேக்குபுரா]] என்னுமிடத்தில் [[இரான் மினார்]] என்னும் சமாதி ஒன்றைக் கட்டினார். இவர் இறந்த பின்னர் இவர்மீது கொண்ட அன்பின் காரணமாக இவரது மனைவி இவருக்கா ஒரு சமாதிக் கட்டிடத்தை லாகூரில் எழுப்பினார்.
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/முகலாயக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது