பாலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பாலாறு தென்னிந்தியாவில் உள்ள ஆறு ஆகும். இது [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் [[கோலார் மாவட்டம்|கோலார் மாவட்டத்திலுள்ள]] [[நந்தி மலையில்மலை]]யில் உற்பத்தியாகிறது. <ref>[http://waterresources.kar.nic.in/river_systems.htm#8.0%20PALAR%20RIVER%20SYSTEM Palar river]</ref>கர்நாடகத்தில் ௯௩ கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் ௩௩ கிமீ தொலைவும் தமிழகத்தில் ௨௨௨ கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே ௱ கிமீ தொலைவிலுள்ள வயலார் என்னுமிடத்தில் [[வங்காள விரிகுடாவில்விரிகுடா]]வில் கலக்கிறது <ref>[http://www.hinduonnet.com/2006/01/11/stories/2006011104890600.htm Dam across the Palar is not feasible: State officials]</ref>. இதற்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன அவற்றில் [[செய்யாறு ஆறு|செய்யாறு]] முதன்மையானதாகும். [[வாணியம்பாடி]], [[ஆம்பூர்]], [[வேலூர்]], ஆர்காடு[[ஆற்காடு]], வாலஜாபேட்டை[[வாலாஜாபேட்டை]], [[காஞ்சிபுரம்]], [[செங்கல்பட்டு]] ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளன.
[[படிமம்:Source of Palar.jpg|thumb|right|நந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகும் இடம்]]
 
==அணை==
[[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திரப்பிரதேச]] அரசு [[குப்பம்|குப்பத்துக்கு]] அருகிலுள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே பாசன அணை கட்ட திட்டமிட்டுள்ளதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களான [[வேலூர் மாவட்டம்|வேலூர்]], [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]], [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]], [[சென்னை மாவட்டம்|சென்னை]] ஆகியவை பாலாறினால் பயன்பெறுகின்றன.
 
[[Image:Mouth of the Palar.jpg|thumb|right|பாலாற்றின் வாய், வானத்திலிருந்து எடுக்கப்பட்டது]]
வரிசை 9:
பாலாறு ஆண்டு முழுவதும் நீர் ஓடும் வற்றாத ஆறு அல்ல. பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரம் ஆகும். கணேசபுரத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள பாசன அணை தமிழகத்திற்கு வரும் ஆற்றின் நீரை பெருமளவில் தடுத்துவிடும் என தமிழக அரசு கருதுகிறது. மேலும் பருவ மழை பொய்க்கும் காலங்களிலும் குறைவான மழைபொழிவு உள்ள காலங்களிலும் இந்த அணை தமிழகத்திற்கு செல்லும் நீரை முழுவதும் தடுத்துவிடும் என தமிழகம் அச்சப்படுவதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
 
அப்போதய தமிழக முதல்வர் [[ஜெயலலிதா|செயலலிதா]] இந்த [[அணை]] கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் அட்டவணை அ -வில் ௧௮௯௨ ஆண்டின் ஒப்பந்தம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்பந்தத்தின் உட்பிரிவின் படி மேல் பாசன மாநிலங்கள் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளையோ அல்லது ஆற்றின் நீரை திருப்பும், தடுக்கும், சேமிக்கும் எந்த விதமான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார். <ref>[http://www.rediff.com/news/2006/jan/06dam.htm TN against AP making dam on Palar river]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது