சம்சுத்தீன் இல்த்துத்மிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
 
'''சம்சுத்தீன் இல்த்துத்மிசு''', அல்லது '''அல்தமாசு''', தில்லி சுல்தானகத்தின் மூன்றாவது முசுலிம் துருக்க சுல்தானும், [[மம்லுக் வம்சம்]] அல்லது அடிமை வம்சம் எனப்படும் வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாலரும் ஆவார். இவர் முதலில் குதுப்புத்தீன் ஐபாக்கின் அடிமையாக இருந்தார். பின்னர் ஐபாக்கின் மகளை மணந்து அவரது மருமகனும் நெருக்கமான தளபதியும் ஆனார். ஐபாக் இறந்த பின்னர் அவரது மகன் அராம் சா சுல்தானானார். அப்போது பதாவுனின் ஆளுனராக இருந்த இல்த்துத்மிசு அவரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டுத் தானே 1211 ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் 1236 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி இறக்கும் வரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளனாக இருந்தார்.
 
மெகரௌலியில் உள்ள [[அவுசு-இஸாம்சி]] எனப்படும் நீர்த்தேக்கத்தை 1230 ஆம் ஆண்டு இவர் கட்டினார். பிற்காலத்தில் முகலாய மன்னர்கள் பயன்படுத்திய சான்சு மகால் இந்த நீர்த்தேக்கத்தின் கரையிலேயே உள்ளது.
 
==இளமைக் காலம்==
சம்சுத்தீன் துருக்கிசுத்தானில் உள்ள இல்பாரி என்னும் பழங்குடியைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதில் முகவும் அழகானவராகவும், மிகுந்த அறிவுத்திரன் கொண்டவராகவும் இருந்தார். இதனால் இவர்பால் பொறாமை கொண்ட இவரது உடன்பிறந்தோர் இவரை அடிமையாக விற்றுவிட்டனர். இவரது இயல்புகளின்பால் கவரப்பட்ட தில்லியின் சுல்தான் குதுப்புத்தீன் ஐபாக் இவரைக் கூடிய விலை கொடுத்து வாங்கினார். அரச சேவையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற சம்சுத்தீன், குதுப்புத்தீனின் மகளையும் மணம் செய்துகொண்டார்.
 
[[பகுப்பு:தில்லி சுல்தானகம்]]
"https://ta.wikipedia.org/wiki/சம்சுத்தீன்_இல்த்துத்மிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது