சம்சுத்தீன் இல்த்துத்மிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
==இளமைக் காலம்==
சம்சுத்தீன் துருக்கிசுத்தானில் உள்ள இல்பாரி என்னும் [[பழங்குடி]]யைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதில் மிகவும் அழகானவராகவும், மிகுந்த அறிவுத்திறன் கொண்டவராகவும் இருந்தார். இதனால் இவர்பால் பொறாமை கொண்ட இவரது உடன்பிறந்தோர் இவரை அடிமையாக விற்றுவிட்டனர். இவரது இயல்புகளின்பால் கவரப்பட்ட தில்லியின் சுல்தான் குதுப்புத்தீன் ஐபாக் இவரைக் கூடிய [[விலை]] கொடுத்து வாங்கினார். அரச சேவையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற சம்சுத்தீன், குதுப்புத்தீனின் மகளையும் மணம் செய்துகொண்டார். இவர் [[குவாலியர்|குவாலியரிலும்]], பாரானிலும் ஆளுனராக இருந்தார் பின்னர் தில்லி சுல்தானகத்தின் அட்சிப்பொறுப்பு ஏற்கும்வரை, 1206 முதல் 1211 ஆம் ஆண்டுவரை பாதுவானின் ஆளுனராக இருந்தார்.
 
==தில்லியின் சுல்தான்==
 
===அதிகாரத்துக்கு வருதல்===
வரி 43 ⟶ 45:
===தொடக்ககாலச் சவால்கள்===
இல்த்துத்மிசு பதவியேற்ற பின்னர், அவர் பல சவால்களை எதிர்நோக வேண்டி இருந்தது. உச், முல்த்தான் ஆகிய பகுதிகளுக்கு ஆளுனராக இருந்த [[நசிருத்தீன் கபாச்சா]], [[லாகூர்|லாகூரைப்]] பிடித்து வைத்துக்கொண்டு தனியரசு நடத்த முயன்றார். [[காசுனி]]யின் சுல்தான், [[தாசுத்தீன் யல்டோசு]] தில்லியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தார். குதுப்புத்தீனால் [[வங்காளம்|வங்காளத்தின்]] ஆளுனராக நியமிக்கப்பட்ட [[கால்சி]]ப் பிரபுவான அலி மர்தான், தன்னைச் சுல்தான் அலாவுத்தீன் என அறிவித்துக் கொண்டார். அவருக்குப் பின் வந்த [[கியாசுத்தீன்]], பீகாரைக் கைப்பற்றிக் கொண்டான். இந்து இளவரசர்களும், தலைவர்களும் தமது சுதந்திரம் பறிபோனதையிட்டுக் குமுறிக்கொண்டிருந்தனர். [[கானாவூச்]], [[பெனாரசு]], குவாலியர், [[காலிஞ்சர்]] போன்ற அவர்களது பகுதிகள் குதுப்புத்தீனால் கைப்பற்றப்பட்டு இருந்தன. சௌகான்கள், அராம் சாவின் காலத்தில் [[ரந்தாம்பூர்|ரந்தாம்பூரை]] மீளக் கைப்பற்றிக் கொண்டனர். இல்த்துத்மிசின் பிரச்சினைகளை மேலும் கூட்டும் வகையில், தில்லியின் அமீர்களில் சிலரும் அவரது ஆட்சிக்கு எதிராக இருந்தனர்.
 
===மங்கோலியரின் பயமுறுத்தல்===
இல்த்துத்மிசின் ஆட்சிக்காலத்தில், வரலாற்றில் முதல் முறையாக [[கெங்கிசுக் கான்|கெங்கிசுக் கானின்]] தலைமையிலான மங்கோலியப் படைகள், [[சிந்து நதி]]க் கரைக்கு வந்தன. இவர்கள் [[நடு ஆசியா]], மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளை மிக விரைவாகக் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் பின்னர், குவாசராசம் அல்லது [[கீவா]] எனப்பட்ட நாட்டைத் தாக்கியபோது அதன் கடைசி அரசனான [[சலாலுத்தீன் மங்கபர்னி]], பஞ்சாபுக்கு வந்து, தில்லி சுல்தானகத்தில் தஞ்சம் கோரினார். ஆனால் இல்த்துத்மிசு அதற்கு இணங்கவில்லை. பின்னர் மங்கபர்னி [[கோக்கர்]]களுடன் உடன்பாடு செய்துகொண்டு முல்த்தானின் கபாச்சாவைத் தோற்கடித்தபின்னர், சிந்துப் பகுதியையும், வடக்குக் [[குசராத்]]தையும் சூறையாடிக்கொண்டு [[பாரசீகம்]] நோக்கிச் சென்றனர். மங்கோலியர்களும் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது இந்தியா பெரிய இடரில் இருந்து தப்பித்துக் கொண்டது.
 
[[பகுப்பு:தில்லி சுல்தானகம்]]
"https://ta.wikipedia.org/wiki/சம்சுத்தீன்_இல்த்துத்மிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது