முதலாம் பகதூர் சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
இவரது காலத்தில் [[இசை]]க்கு மீண்டும் ஆதரவு அளிக்கப்பட்டது. கோவில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை. இவரது குறுகிய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பேரரசு ஒன்றாக இருந்தாலும், [[உட்பூசல்]]கள் உயர்நிலையில் இருந்தன. எனினும் இவரது தந்தையாரால் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான பாதிப்புக்களை இவரால் சீர்படுத்த முடியவில்லை.
 
[[Image:Moti Masjid, Mehrauli, Delhi.jpg|left|thumb|முதலாம் பகதூர் சாவினால் கட்டப்பட்ட மெகரௌலியில் உள்ள மோத்தி மசூதி.]]
போர்த்திறமை இன்மை, முதிர்ந்த [[வயது]] போன்ற இவரது குறைபாடுகள் பேரரசின் பிரச்சினைகளை மேலும் கூட்டின. இவரது குறுகியகால ஆட்சிக்குப் பின்னர் முகலாயப் பேரரசு ஒரு நீண்ட கால இறங்குமுக நிலையை எய்தியது. இவர் ஒரு துணிவுள்ளவரும், புத்திக்கூர்மை கொண்டவரும் எனக் கூறப்படுகிறது. எனினும் இவரது தந்தையின் அடக்கு முறைகளினால் இவரது திறமைகள் பாதிக்கப்பட்டன. பொதுவாகப் பலரும் இவர் ஒரு மென்மையான, நீதியான மனிதர் என்றும்; படித்த, மதிப்புக்குரிய, ஒழுக்கமான ஒருவராக இருந்தாரென்றும் ஏற்றுக்கொள்கின்றனர். தனக்கு முன் இருந்தவர்களைப் போல் பெருமைக்குரியவராக இல்லாதிருந்தாலும், அவருக்குப் பின் வந்தவர்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வெற்றிகரமான ஒருவராக இருந்தார். இவரது சடுதியான இறப்புக்குப் பின்னர் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இவருக்குப் 12 ஆண்மக்களும், 183 பெண்மக்களும் இருந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பகதூர்_சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது