விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஒலிபெயர்ப்பு, எழுத்துப்பெயர்ப்பு: என் கருத்து - ' குறியீட்டைப் பயன்படுத்துவதில் முற்றிலும
வரிசை 77:
* இருப்பினும் விக்கிபீடியாவை நீக்கிப் பார்த்தால் உங்கள் பரிந்துரையில் கொள்கை சார்ந்த வலு இருப்பதாகவே தோன்றுகிறது. [[எழுத்துச் சீர்மை]] [[தமிழ்|தமிழுக்குப்]] புதிதல்ல. உங்கள் பரிந்துரைகளை இதுவரை கட்டுரையாக வெளியிடவில்லை என்றால் [[தமிழ் இணைய மாநாடு]] போன்றவற்றில் படையுங்கள். [[வியட்னாம்]] எழுத்துப்பெயர்ப்ப்பு முறைமை பள்ளி அளவிலேயே கற்பிக்கப்படும் அளவிற்கு வந்ததுபோல் வருமாயின் எந்தச் சிக்கலும் இல்லை.
ஒரு சிறு குறிப்பு. இந்த விவாதத்தை செயல்பாடு அடிப்படையில் மட்டுமே நோக்குவோம். தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 08:46, 17 ஜூன் 2006 (UTC)
 
செல்வா, பல்வேறு எழுத்துச்சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளீர்கள். அவற்றுக்கு ஒவ்வொன்றாக விரிவாக மறுமொழி அளிக்க வேண்டியுள்ளது. தற்பொழுது, ' குறியீடு குறித்த என் கருத்தை மட்டும் சுருக்கமாக பதிவு செய்கிறேன். எஞ்சியவற்றை விரைவில் எழுதுகிறேன்.
 
முதலில், தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கும் அனைவரும் தமிழார்வத்தால் உந்தப்படுபவர்கள் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இல்லாவிடில், எளிமையாக ஆங்கில விக்கிபீடியாவிலேயே பங்களித்துப் போய்விட்டுவிடலாமே? ஆதலால், இங்கு அனைவரும் திறந்த மனதோடு தான் இந்த 'குறியீடு விட்யத்தை நோக்குகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
 
என்னை பொருத்த அளவில், ' குறியீடு பயன்படுத்துவதற்கான எந்த அவசியமும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு மொழியின் எழுத்துக்களைக் கொண்டு பிற மொழி ஓசைகள் அனைத்தையும் எழுதிக் கட்டுவது என்பது இயலாத ஒன்று. தேவையும் அன்று. தமிழை விட ஆங்கிலம் இன்று உலகப் பொது மொழியாக விளங்குகிறது.ஆனால் பிற மொழி ஓசைகளை சரியாக உச்சரிப்பதற்காக அவர்கள் குறியீடு எதையும் உருவாக்கி எழுதுவதில்லை. நான் அறிந்த எந்த மொழியிலும் இப்படி குறியீடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் கிரந்த எழுத்துக்கள் உண்டென்றாலும் அவற்றுக்கும் குறியீடுகளுக்கும் பயன்பாட்டு அளவில் மிகுந்த வேறுபாடுண்டு. இதற்கு IPA மட்டுமே சரியானத் தீர்வாக இருக்க முடியும். அல்லது, சரியான உச்சரிப்பை பழக விரும்புவோர் அந்தந்த மொழிகளையே கற்றூக் கொள்வது தான் தீர்வு.
 
ஒரு வாதத்திற்காக இப்படி ஒரு குறியீடு தேவை என்று வைத்துக்கொண்டாலும், இன்னும் எத்தனையோ மொழிகளில் எத்தனையோ ஓசைகள் உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் இன்னும் எத்தனைக் குறிகளை அறிமுகப்படுத்துவது ? பிறகு, தமிழை எழுதுவதே ஒரு குறியீட்டு மொழியை பயன்படுத்துவது போல ஆகிவிடாதா? எடுத்துக்காட்டுக்கு, வா*தா^பீ~~ (இந்த சொல்லுக்கு/பெயருக்கு பொருள் எதுவும் இல்லை) என்பது போல் வேடிக்கையான, அபாயகரமான முழுக்க குறியீடுகளாலான எழுத்துக்கூடல்கள் வராது என்பதற்கு என்ன நிச்சயம்? சரி, ' குறியீட்டுடன் நிறுத்திக்கொள்வோம் என்று கொண்டாலும், எந்தெந்த இடங்களில் அதைப் பயனபடுத்துவதில் என்பதில் தெளிவில்லை. december என்பதை எப்படி உச்சரிப்ப்து என்பது பலருக்கும் தெரியும். அதை 'டிசெம்'பர் என்று எழுதிக்காட்டுவது அவசியமா? பாபு என்று அனைவரும் அறிந்த பெயரை 'பா'பு என குறீடுகளுடன் எழுதுவது அவசியமா? எழுதினாலும் வேடிக்கையாக இருக்கும். 'பா'க்'தா'த் என்று ஊர்ப் பெயரை எழுதினால் எல்லா குறியீடுகளையும் நீக்கி விட்டுப் படிப்பதற்குள் மண்டை குழம்பி விடுகிறது. எழுத்து மூலமாக உச்சரிப்பை கற்றுத் தருவதை விட, கேட்டு அறிந்து பழகுவது தான் நிலைக்கும். '''இதற்கு மிக எளிமையான தீர்வு, குறைந்தபட்சம் விக்கிமீடியாவிலாவது உள்ளது. வேற்று மொழிப்பெயர்கள் வரும் இடத்து அப்பெயர்களை ஆங்கில எழுத்துக்களிலும், அந்தந்த மொழி எழுத்துக்களிலும் தரலாம் என்பது மரபு. துல்லியமான உச்சரிப்பை உணர்த்த இது தான் வழி. தமிழ் தவிர வேறு மொழி வாசிக்கத் தெரியாதவர்களுக்கு ஒலிக்கோப்புகளைத் தரலாம்.''' ஒலிக்கோப்பு இணைப்பது உடனடிச் சாத்தியமாகத் தோன்றாவிட்டாலும், பல நூறு கோப்புக்களை இப்படி சேர்ப்பதில் சிரமம் இருந்தாலும் இது தான் சரியான வழி. ஒலிக்கோப்புகளை பெற்றுக் கொள்வதில் ஆங்கில விக்கிபீடியா தளமும் விக்கிமிடியா காமன்சும் உதவும்.
 
வேற்று மொழி உச்சரிப்புகளை தமிழருக்கு சரியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்பது நன்னோக்கம் தான். ஆனால் அதற்கு எழுத்து வழி குறியீடுகள் ஒரு தீர்வாக என்னால் எண்ண இயலவில்லை. தற்பொழுது தமிழில் வழங்கி வரும் பல்வேறு வெளி நாட்டுப் பெயர்கள் சரியான உச்சரிப்புடையவையுடைவை அன்று (எ.கா. ஆபிரகாம் லிங்கன்). ஆனால், அதில் பாதகம் ஒன்றும் இல்லை. தமிழரின் வசதிக்கேற்ப, தமிழின் ஒலி அமைதிக்கேற்ப உச்சரிப்பதில் தவறு இல்லை. Ramanujan என்ற பெயரை இராமனுசன் என்று எழுதுவதிலோ ராமனுசன் / ராமனுஜன் என்று உச்சரிப்பதிலோ எனக்கு உடன்பாடு தான். ஆனால், இதற்காக குறியீட்டை அறிமுகப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அதிலும் ' குறியீட்டை தெரிந்து எடுத்ததின் நியாயம் என்ன என்றும் புரியவில்லை. ' குறியீடு தமிழர் ஏற்கெனவே நன்கு அறிந்த ஒரு நிறுத்தக் குறியீடு. அதை ஓசையை உணர்த்த கொண்டு வந்தால் பெரும் குழப்பம் தான் விளையும்.
 
தவிர, கிரந்த எழுத்துக்களை தனித்தும் உச்சரிக்க முடியும்..இந்தக் குறியீட்டை எப்படி உச்சரிப்பது? இது மெய்யா உயிரா உயிர் மெய்யா ஒற்றா?கிரந்த எழுத்துக்களை கூட கூடுதல் மெய்களாகக் கொண்டு உயிரோடு புணரசெய்யலாம. ஆனால் இந்த குறியீடு உயிர் மெய்யெழுத்துக்களுடன் மட்டும் புணர்கிறது. இதை என்ன வகையில் சேர்ப்பது? இதற்கான இலக்கணத்தை யார் எப்படி வரையறுப்பது? சொல்லித் தருவது? தமிழுக்கு எழுத்துச் சீர்திருத்தம் புதிதல்ல என்றாலும், அவை ஏற்கெனவே உள்ள எழுத்து வடிவங்களை மாற்றியனவே தவிர, புது எழுத்துக்களையோ குறியீடுகளையோ கொண்டு வரவில்லை. பழையன கழித்து புதியன புகலாம் என்றாலும், அடிப்படை விதிகளை உடைப்பது போல் உள்ளது இந்தக் குறியீடு. வடமொழி உச்சரிப்புக்களை உணர்த்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது, ஏன் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தகூடாது என்ற கேள்வி எழலாம். ஆனால், கிரந்த எழுத்துக்களைக் கூட இயன்ற அளவு விக்கியிலாவது தவிர்க்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு.
 
தங்களின் பன்மொழி அறிவு, ஆளுமை ஆகியவற்றுடன் ஒப்பு நோக்கும் போது என் அனுபவம் குறைவு என்பதை அறிவேன். ஆகையால், இதை என் விமர்சனமாக கொள்ளாமல், என் ஐயங்களாக கொள்ளலாம். இந்த குறியீடு குறித்து பல காலமாக நீங்கள் எழுதி வருவதாகத் தெரிவித்திருந்தீர்கள். ஒருவேளை என் பல ஐயங்களுக்கு நீங்கள் முன்னரே பதில் தந்திருக்கக் கூடும். எனினும், தற்பொழுது விக்கிபீடியாவில் உள்ள நான்கு பேர் கூடி விவாதித்து எடுக்கக்க் கூடிய முடிவாக எனக்குத் தோன்றவில்லை. உண்மையிலேயே இது போன்ற குறியீடுகளுக்கு அவசியம் இருப்பதாகத் தோன்றீனாலும், அதை விவாதித்து முடிவு செய்ய இது சரியான களம் அல்ல. இன்னும் பெரிய களத்தில், மொழியறிஞர்கள் கூடி முடிவெடுக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் அரசை அணுக முடியுமோ அணூகி, இம்முடிவை செயற்படுத்த வேண்டும். இம்மாதிரி முடிவுகளை செயற்படுத்தஅரசுக்கு என்ன உரிமை என்ற விவாதம் அர்த்தமற்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இம்மாதிரி பெரிய அளவிலான மாற்றங்களை அரசு மட்டுமே செய்ய இயலும். உலகெங்கும் இது தான் விதி.
 
மொழி விவாதங்களைத் தவிர்த்துப் பார்த்தாலும், அடிப்படை தொழில்நுட்பச் சிக்கல்களும் உள்ளன. விக்கிமீடியா தேடு பொறிக்கும் சரி, வேறு இணையத் தேடு பொறிகளுக்கும் சரி, 'குறியீட்டை விட்டுவிட்டு தேடத் தெரியவில்லை. இதைக்கூட வருங்காலங்களில் சரி செய்யலாம் என்றாலும், விக்கிபீடியாவில் கட்டுரைகள் அகர வரிசைப்பட்டியலிலும் கோளாறு வரும். 'தா, 'பா, 'டா, 'கா என எல்லா எழுத்துக்களும் ' என்பதின் கீழ் தான் அட்டவணைப்படுத்தப்படுமே தவிர, அந்தந்த எழுத்துக்களின் கீழ் அட்டவணைப்படுத்தப்படாது. பகுப்புப் பக்கங்களிலும் இந்தப் பிரச்சினை வரும். விக்கிபீடியா கட்டுரைகளில் ஒழுங்கு நிலை (consistancy) கொண்டு வர முயல்கிறோம். ' குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அனைத்துக் கட்டுரைகளிலும் இது செயற்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை உறுப்பினர்களின் உடன்பாடின்றி இதை செயற்படுத்துவது சாத்தியமல்ல. தாங்கள் எழுதும் கட்டுரைகளில் மட்டும் இதை அனுமதிப்பதாலும் உங்கள் நோக்கத்திற்கு முழு வெற்றி கிடைக்கப் போவதில்லை. குழப்பம் தான் மிஞ்சும். இந்தக் குறியீட்டைப் பற்றி விக்கி பயனர்களுக்கு எப்படித் தெரிவிப்பது? ஒவ்வொரு முறை இக்குறியீடு வரும் போதும் அடிக்குறிப்புத் தருவதோ விளக்க இணைப்பு தருவதோ சாத்தியமற்றது. இந்தக் குறியீட்டை விரும்பாத பயனர், ஏற்கனவே இக்குறியீடு பயன்படுத்தியிருக்கும் இடங்களில் இதை நீக்கினாலும் தடுக்க இயலாது. ஒவ்வொரு முறையும் வாதித்துக் கொண்டிருப்பது நம் ஆற்றலைத் தான் வீணாக்கும்.
 
எனவே இனி வரும் கட்டுரைகளில், இக்குறியீட்டைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதையே விக்கிபீடியா கொள்கையாகவும் பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே இக்குறியீடுகள் பயன்படுத்தியுள்ள இடங்களில் அவற்றை நீக்கி மாற்றி வழக்கம் போல் எழுதக் கோருகிறேன். இதை செல்வாவோ மற்ற பயனர்களோ நேரம் கிடைக்கும் போது செயற்படுத்தினால் நன்றாக இருக்கும். 'குறியீட்டுடன் வழி மாற்றுப் பக்கங்கள், அடைப்புக்குறிக்குள் மாற்று எழுத்துக்கூட்டல்கள் தருவதிலும் முற்றிலும் உடன்பாடில்லை. இந்த விடயத்தில் தீர்மானமான நிலைப்பாடு எடுக்க வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன். எனினும் , சில வாதங்களை தெளிவாக வைக்க வேண்டியிருக்கிறது.
 
இப்படி ஒரு குறியீடு தமிழ அரசால் ஏற்கப்பட்டு, பள்ளிகூடங்களில் சொல்லித் தரப்பட்டு, அனைத்து தமிழரும் தானாக இக்குறியீட்டைக் கண்டுகொள்ளவும் பயன்படுத்தவும் ஏதுவான ஒரு நிலை வந்தால் ஒழிய, இக்குறியீட்டை விக்கியில் எந்த தருணத்திலும் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்பது தான் என் உறுதியான நிலைப்பாடு ஆகும்.--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:52, 19 ஜூன் 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".