எ. சா. ராஜசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
==சொந்த வாழ்க்கை==
இவருடைய மனைவி பெயர் விஜய லட்சுமி. இவருடைய மகன் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி ஓர் அரசியல்வாதி. இவருடைய மகள் சர்மிளா.
SUMMA
 
==மரணம்==
இராஜசேகர ரெட்டி, 2009, செப்டம்பர் 2 ஆம் நாள் சித்தூர் சென்று அங்கு பின் தங்கிய நிலையில் உள்ள மக்களைச் சந்தித்துக் குறைகள் கேட்டறியும் திட்டத்துடன் காலை 8 மணி அளவில் உலங்கு வானூர்தியில் கிளம்பினார். அந்த வானூர்தி சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு இழக்க, காலை ஒன்பதரை மணி முதலாகவே அதனைத் தேடும் பணி தொடங்கியது. இந்திய சரித்திரத்தின் முக்கியமான தேடுதல் வேட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தேடுதல் வேட்டை 24 மணிநேரம் தொடர்ந்தது. மாநில அரசின் காவல் துறை, புலனாய்வுத் துறை, இராணுவத்தின் அதிநவீன வானூர்திகள், தொழில்நுட்பங்கள், கடற்படை, இஸ்ரோ ஆகிய அனைத்தின் ஒத்துழைப்புடனும் கடும் மழை, அடர்ந்த காடு ஆகிய இடர்களையும் மீறித் தொடர்ந்த வேட்டையின் இறுதியில் இராஜசேகர ரெட்டி பயணித்த உலங்கு வானூர்தி செப்டம்பர் 3 ஆம் நாள் காலை எட்டரை மணிக்கு உடைந்த நிலையில் கர்நூல் மாவட்ட நல்லமலா கானகத்தின் ருத்ரகொண்டா குன்றின் மீது கண்டறியப்பட்டது. இராஜசேகர ரெட்டி, அவருடன் பயணம் செய்த இரண்டு விமான ஓட்டிகள் (எஸ்.கே.பாட்டியா, எம்.எஸ் ரெட்டி), அவருடைய தனிச் செயலாளர் (பி.சுப்பிரமணியன்), பாதுகாப்பு உயர் அதிகாரி (ஆ.எஸ்.சி.வெஸ்லி) ஆகிய ஐவரின் உயிரற்ற உடல்கள் கருகிய நிலையில் கண்டறியப்பட்டு ஹைதராபாத் கொண்டுவரப்பட்டன. இராஜசெகர ரெட்டியின் உடல், அரசு மரியாதையுடன் செப்டம்பர் 4 ஆம் நாள் இறுதிச் சடங்குகளுக்குப் பின் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எ._சா._ராஜசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது