உருசியாவின் மூன்றாம் பீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
 
அன்னாவின் சகோதரியான எலிசபெத் உருசியப் பேரரசியானதும், பீட்டரை செருமனியில் இருந்து உருசியாவுக்கு வரவழைத்து, 1742 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் தனது வாரிசாக அறிவித்தார். இதற்கு முன்னர் 1742 ல், [[உருசிய-சுவீடன் போர் (1741௧743)|உருசிய-சுவீடன் போரின்போது]] உருசியப் படைகள் பின்லாந்தைக் கைப்பற்றி வைத்திருந்த காலத்தில் 14 வயதாயிருந்த பீட்டர் பின்லாந்தின் அரசராக அறிவிக்கப்பட்டார். பிள்ளைகள் இன்றி இறந்துபோன சுவீடனின் பத்தாம் சார்லசின் கீழிருந்த ஆட்சிப் பகுதிகளுக்கான வாரிசு உரிமை அடிப்படையிலேயே இந்த அறிவிப்புச் செய்யப்பட்டது. அக்டோபர் 1742 ஆம் ஆண்டில் ஏறத்தாழ இதே நேரத்தில், சுவீடன் நாடாளுமன்றம் அந்நாட்டின் அரசுரிமைக்கான வாரிசாக பீட்டரைத் தெரிவு செய்தது. பீட்டர் உருசியாவின் அரசுரிமைக்கான வாரிசாகத் தெரிவு செய்யப்பட்டதை சுவீடன் நாடாளுமன்றம் அறிந்திருக்கவில்லை. சுவீடனின் தூதர் [[செயின்ட் பீட்டர்சுபர்க்]]குக்கு வந்தபோது, சுவீடனின் தெரிவை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக இளம் வயதினரான பீட்டரின் சார்பில் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
 
 
பேரரசி எலிசபெத், தனது உறவுப் பெண்ணும், [[அனோல்ட் - செர்ப்சிட்]]டின் இளவரசரின் மகளுமான சோஃபியா அகசுத்தா பிரெடெரிக்காவைப் பீட்டருக்கு மணம் முடிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த இளவரசி முறைப்படி [[உருசிய மரபுவாதக் கிறித்தவம்|உருசிய மரபுவாதக் கிறித்தவ]] சமயத்துக்கு மாற்றப்பட்டபின், ஏக்காடேரினா அலெக்சியேவ்னா என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இந்தப் பெண்ணே பிற்காலத்தில் [[உருசியாவின் இரண்டாவது கத்தரீன்|இரண்டாவது கத்தரீன்]] என்னும் பெயருடன் உருசியாவின் பேரரசியாக விளங்கியவர். 1745 ஆம் ஆண்டு இவர்களுக்குத் [[திருமணம்]] நடைபெற்றது. இவர்களது மண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. எனினும் இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். மகனே பின்னாளில் உருசியாவை ஆண்ட பேரரசர் பால் ஆவார். ஆனால், பால், பீட்டருக்குப் பிறக்கவில்லை என்றும், உண்மையில் தாங்கள் என்றுமே மண உறவில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் கதரீன் பின்னர் கூறியிருந்தார். இவர்கள் பதினாறு ஆண்டுகள் ஒன்றாக இருந்த காலத்திலேயே பீட்டருக்குப் பல காதலிகள் இருந்தனர். அதுபோலவே கத்தரீனுக்கும் பல காதலர்கள் இருந்தனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_மூன்றாம்_பீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது