உருசியாவின் மூன்றாம் பீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
 
 
பேரரசி எலிசபெத், தனது உறவுப் பெண்ணும், [[அனோல்ட் - செர்ப்சிட்]]டின் இளவரசரின் மகளுமான சோஃபியா அகசுத்தா பிரெடெரிக்காவைப் பீட்டருக்கு மணம் முடிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த இளவரசி முறைப்படி [[உருசிய மரபுவாதக் கிறித்தவம்|உருசிய மரபுவாதக் கிறித்தவ]] சமயத்துக்கு மாற்றப்பட்டபின், ஏக்காடேரினா அலெக்சியேவ்னா என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இந்தப் பெண்ணே பிற்காலத்தில் [[உருசியாவின் இரண்டாவது கத்தரீன்|இரண்டாவது கத்தரீன்]] என்னும் பெயருடன் உருசியாவின் பேரரசியாக விளங்கியவர். 1745 ஆம் ஆண்டு இவர்களுக்குத் [[திருமணம்]] நடைபெற்றது. இவர்களது மண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. எனினும் இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். மகனே பின்னாளில் உருசியாவை ஆண்ட பேரரசர் பால் ஆவார். ஆனால், பால், பீட்டருக்குப் பிறக்கவில்லை என்றும், உண்மையில் தாங்கள் என்றுமே மண உறவில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் கதரீன் பின்னர் கூறியிருந்தார். இவர்கள் பதினாறு ஆண்டுகள் ஒன்றாக இருந்த காலத்திலேயே பீட்டருக்குப் பல காதலிகள் இருந்தனர். அதுபோலவே கத்தரீனுக்கும் பல காதலர்கள் இருந்தனர்.
 
 
இயற்கையாகவே பீட்டர் தோற்றப் பொலிவு அற்றவர். [[அம்மை நோய்]] அவரை அழகற்றவர் ஆக்கிவிட்டிருந்தது. இவரது தரமற்ற பழக்க வழக்கங்களினால் இவர் அருவருக்கத்தக்கவர் ஆனார். அக்காலத்தின் மிக மோசமான வகையைச் சேர்ந்த சிறிய செருமன் இளவரசர் என்று கூறத்தக்க எல்லா இயல்புகளும் அவருக்கு இருந்தன. தனது இளவரசுத் தகுதி காரணமாகக் [[கண்ணியம்]], மற்றவர்களுடைய உணர்வுகள் ஆகியவற்றைத் துச்சமாக மதிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் எண்ணிக்கொண்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_மூன்றாம்_பீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது