உருசியாவின் மூன்றாம் பீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
 
இயற்கையாகவே பீட்டர் தோற்றப் பொலிவு அற்றவர். [[அம்மை நோய்]] அவரை அழகற்றவர் ஆக்கிவிட்டிருந்தது. இவரது தரமற்ற பழக்க வழக்கங்களினால் இவர் அருவருக்கத்தக்கவர் ஆனார். அக்காலத்தின் மிக மோசமான வகையைச் சேர்ந்த சிறிய செருமன் இளவரசர் என்று கூறத்தக்க எல்லா இயல்புகளும் அவருக்கு இருந்தன. தனது இளவரசுத் தகுதி காரணமாகக் [[கண்ணியம்]], மற்றவர்களுடைய உணர்வுகள் ஆகியவற்றைத் துச்சமாக மதிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் எண்ணிக்கொண்டார்.
 
==ஆட்சிக்காலம்==
1762 ஆம் ஆண்டில் இவர் ஆட்சிக்கு வந்ததும், பிரசியாவுடனான [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரிலிருந்து]] உருசியாவை விலக்கிக்கொண்டு அந்நாட்டுடன் சமாதானம் செய்துகொண்டார். பெர்லினைக் கைப்பற்றி உருசியா வெற்றியின் விளிம்பில் இருந்தும் கூட, உருசியாவுக்கு எவ்வித நன்மையும் இன்றிப் போரிலிருந்து விலகிக் கொண்டதினால், பல பிரபுக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார். பிரசியாவுடன் [[கூட்டணி]] அமைத்துக்கொண்டு, [[டென்மார்க்]] நாட்டுடன் மக்களால் விரும்பப்படாத ஒரு போரையும் தொடங்கினார். அத்துடன் [[உருசிய மரபுவாதத் திருச்சபை]]யை லூத்தரியச் செயல்முறைகளைக் கைக்கொள்ளுமாறு வற்புறுத்தினார் என்றும் கூறப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_மூன்றாம்_பீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது