உருசியாவின் மூன்றாம் பீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
 
எனினும், பீட்டரின் குறுகிய ஆட்சிக்காலத்தில் சிறியவையானாலும் சில முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இதனால் பிரபுக்களுக்கு முதன்மை இடங்களை வழங்கிக், [[குடியானவர்]]களையும் சாதாரண நகர மக்களையும் அடக்கி ஒடுக்கும் பழைய முறையில் இருந்து விலகி, [[மேற்கு ஐரோப்பா]]வின் பாணியிலான [[முதலாளித்துவம்|முதலாளித்துவ]], வணிகவாதப் பொருளாதார முறையில் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்பட்டது. இவர் காலத்தில் [[தொழிலதிபர்]]கள் தமது வேலையாட்களாகக் [[கொத்தடிமை]]களை விலை கொடுத்து வாங்கும் முறையை ஒழித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. உள்நாட்டில் [[சர்க்கரை]] உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதற்காகச் சர்க்கரை [[இறக்குமதி]]யையும் இவர் தடை செய்தார். இவரது முக்கியமான நடவடிக்கைகளுள் ஒன்று, முதலாம் பீட்டரினால் பிரபுக்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருந்த [[இராணுவ சேவை|இராணுவ]] அல்லது [[குடிசார் சேவை]]யை இல்லாது ஒழித்தமை ஆகும்.
 
 
தன்னுடன் மணமுறிவு செய்துகொண்டு, பீட்டர் தனது [[ஆசைநாயகி]]யான எலிசபெத் வொரொன்ட்சோவாவைத் திருமணம் செய்ய எண்ணுகிறார் என்று ஐயம் கொண்ட கத்தரீன், தனது காதலரான [[கிரிகோரி ஓர்லோவ்]] என்பவருடன் சேர்ந்து பீட்டரை ஆட்சியில் இருந்து அகற்றத் திட்டம் தீட்டினார். பீட்டர் தனது [[மெய்க்காவலர்]]களுக்குக் கடுமையான ஒழுக்க நெறிகளை அறிமுகப்படுத்த எண்ணியிருந்தார். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அம்மெய்க்காவலர்களுடைய கிளர்ச்சிக்குத் திட்டமிடப்பட்டது. இக் கிளர்ச்சியின்போது பீட்டர் கைது செய்யப்பட்டு முடிதுறக்க வைக்கப்பட்டர். பெரும்பாலான பிரபுக்களின் ஆதரவுடன் கத்தரீன் பேரரசியானார். சில காலத்தின் பின் [[ரோப்சா]] என்னுமிடத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த பீட்டர் கொல்லப்பட்டார். இதற்குப் பொறுப்பானவர்களைக் கத்தரீன் தண்டிக்காததால், அவரே இதற்கான ஆணையைப் பிறப்பித்திருக்கலாம் என்ற ஐயம் நிலவுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_மூன்றாம்_பீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது