ஜிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== கலையுலக வாழ்வு ==
ஜிக்கி தனது 6வது வயதிலேயே சங்கீதத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11வது வயதிலேயே இவரது தாய்மாமன் [[சிட்டிபாபு]]வின் முயற்சியினால் பழம்பெரும் இசையமைப்பாளர் [[எஸ். வி. வெங்கட்ராமனின்]] இசையில், [[ஞானசௌந்தரி]] [[1948]] திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான [[பல்லவி]] ''அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே'' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து [[பந்துலம்மா]], [[தியாகையா]], [[கொல்லபாமா]], [[மனதேசம்]] ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட பிரபல இசைமேதை [[ஜி. இராமநாதன்]] அவர்கள், பலரது மறுப்பையும் பொருட்படுத்தாது இவரது 13வது வயதில், [[1950]] இல் மொடேர்ன் தியேட்டர்ஸாரின் [[மந்திரி குமாரி]] திரைப்படத்தில் ''வாராய் நீ வாராய்'', ''உலவும் தென்றல் காற்றினிலே'' முதலிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது [[1950]] - [[1960]] காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. [[1952]] இல் [[கே.வி. மகாதேவன்]] இசையமைத்த [[குமாரி]] படத்தில் தனது வருங்காலக் கணவரான [[ஏ. எம். ராஜா]]வுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். தொடர்ந்து ராஜா, ஜிக்கி பாடிய நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் மறக்க முடியாதவைகளாகத் தமிழ்த் திரையிசையுலகை ஆக்கிரமித்துள்ளன. பிரபல வட இந்திய நடிகரான [[ராஜ்கபூரின்]] சொந்தத் தயாரிப்பான ''ஆஹ'' இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ''அவன்'' என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடியிருக்கிறார். ''கண்காணாததும்'', ''கல்யாண ஊர்வலம்வரும்'', ''ஆகா நானின்று அறிந்து கொண்டேன்'', ''உன் பேரைக்கேட்டேன்'', ''ஏகாந்தமாம் இம்மாலையில்'' முதலான இனிய பாடல்கள் அவன் திரைப்படத்தில் ஜிக்கியின் குரலில் ஒலித்தன. பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் அக்காலத்தில் ஜிக்கி பாடினார்.
 
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். [[1955]] இல் [[மகேஸ்வரி]] படத்தின் ''அழகு நிலாவின் பவனியிலே'' பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, [[ஏ. எம். ராஜா]] தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். [[1958]] இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி [[ஏ. எம். ராஜா]]வைத் திருமணம் செய்து கொண்டார்.
 
 
== ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில ==
"https://ta.wikipedia.org/wiki/ஜிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது