ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,241 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(வார்ப்புரு தமிழாக்கம்)
No edit summary
 
'''ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்''' (1740–1748), [[போலிய-லித்துவேனியப் பொதுநலவாயம்]], [[ஓட்டோமான் பேரரசு]] ஆகியவை தவிர்ந்த [[ஐரோப்பா]]வின் எல்லா நாடுகளும் ஈடுபட்டிருந்த ஒரு போராகும். சலிக்குச் சட்டத்தின் படி பெண்களுக்கு அரசுரிமை இல்லையாதலால், [[ஆசுத்திரியாவின் மரியா தெரேசா]], அப்சுபர்க்கின் அரசுரிமைக்குத் தகுதியற்றவர் என்னும் காரணத்தை முன்வைத்து இப் போர் தொடங்கியது. எனினும் உண்மையில் பிரசியாவும், பிரான்சும் அப்சுஅர்க்கின் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டன. பிரான்சின் எதிரிகளான [[பெரிய பிரித்தானியா]]வும், [[டச்சுக் குடியரசு]]ம் ஆசுத்திரியாவுக்குச் சார்பாக இருந்தன. இவற்றுடன் [[சார்டினிய இராச்சியம்|சார்டினிய இராச்சியமும்]], [[சக்சனி]]யும் சேர்ந்துகொண்டன. பிரான்சும், பிரசியாவும் பவேரியாவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டன. [[ஐக்சு-லா-சப்பல்லே ஒப்பந்தம்]] என்னும் ஒப்பந்தத்துடன் 1748 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது.
 
==பின்னணி==
1740 ஆம் ஆண்டில் [[புனித ரோமன் பேரரசர் ஆறாம் சார்லசு|ஆராம் சார்லசு]] இறந்த பின்னர் அவரது மகள் மரியா தெரேசா, [[அங்கேரி]], [[குரோசியா]], [[பொகேமியா]] ஆகியவற்றின் அரசியாகவும், ஆசுத்திரியாவின் [[ஆர்ச்டியூச்சசு]] (Archduchess) ஆகவும், [[பார்மா]]வின் [[டியூச்சசு]] (Duchess) ஆகவும் ஆனார். ஆறாம் சார்லசு [[புனித ரோமப் பேரரசர்]] ஆகவும் இருந்தார். ஆனால், இப் பதவி பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லையாதலால், மரியா தெரசா புனித ரோமப் பேரரசியாக முயலவில்லை. மரியா தெரசா பரம்பரையாக வரும் [[அப்சுபர்க்]] பகுதிகளின் அரசியாவதும், அவரது கணவர் லோரைனின் டியூக் [[புனித ரோமப் பேரரசர் முதலாம் பிரான்சிசு|முதலாம் பிரான்சிசு]] புனித ரோமப் பேரரசர் ஆவது என்பதுமே திட்டமாக இருந்தது. ஒரு பெண் அப்சுபர்க்கின் ஆட்சிக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னரே தெரிந்திருந்தது. இதனால், ஆறாம் சார்லசு பெரும்பாலான செருமன் நாடுகளை இணங்கவைத்து [[நடைமுறைக்கேற்ற இசைவாணை, 1713]] என்பதை உருவாக்கினார்.
 
[[பகுப்பு:ஐரோப்பாவின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/426918" இருந்து மீள்விக்கப்பட்டது