ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
==பின்னணி==
1740 ஆம் ஆண்டில் [[புனித ரோமன் பேரரசர் ஆறாம் சார்லசு|ஆராம்ஆறாம் சார்லசு]] இறந்த பின்னர் அவரது மகள் மரியா தெரேசா, [[அங்கேரி]], [[குரோசியா]], [[பொகேமியா]] ஆகியவற்றின் அரசியாகவும், ஆசுத்திரியாவின் [[ஆர்ச்டியூச்சசு]] (Archduchess) ஆகவும், [[பார்மா]]வின் [[டியூச்சசு]] (Duchess) ஆகவும் ஆனார். ஆறாம் சார்லசு [[புனித ரோமப் பேரரசர்]] ஆகவும் இருந்தார். ஆனால், இப் பதவி பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லையாதலால், மரியா தெரசா புனித ரோமப் பேரரசியாக முயலவில்லை. மரியா தெரசா பரம்பரையாக வரும் [[அப்சுபர்க்]] பகுதிகளின் அரசியாவதும், அவரது கணவர் லோரைனின் டியூக் [[புனித ரோமப் பேரரசர் முதலாம் பிரான்சிசு|முதலாம் பிரான்சிசு]] புனித ரோமப் பேரரசர் ஆவது என்பதுமே திட்டமாக இருந்தது. ஒரு பெண் அப்சுபர்க்கின் ஆட்சிக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னரே தெரிந்திருந்தது. இதனால், ஆறாம் சார்லசு பெரும்பாலான செருமன் நாடுகளை இணங்கவைத்து [[நடைமுறைக்கேற்ற இசைவாணை, 1713]] என்பதை உருவாக்கினார்.
 
1713ன் நடைமுறைக்கேற்ற இசைவாணையை மீறி, [[பிரசியாவின் இரண்டாம் பிரடெரிக்|பிரசியாவின் அரசர் இரண்டாம் பிரடெரிக்]], 1537 ஆம் ஆண்டின் [[பிரீக் ஒப்பந்தம், 1537|பிரீக் ஒப்பந்தத்தைச்]] சாக்காகக் கொண்டு 1740 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி [[சிலேசி]]யாவைக் கைப்பற்றிக் கொண்டபோது சிக்கல்கள் தொடங்கின. ஒரு பெண் என்ற வகையில் மரியா தெரேசா பலம் குறைந்தவராகக் கருதப்பட்டு, பவேரியாவின் சார்லசு ஆல்பர்ட் போன்ற வேறு சிலரும் தமது பரம்பரை உரிமையைக் காட்டி ஆட்சியுரிமைக்குப் போட்டியிட்டனர்.
 
==1740ன் சிலேசியப் படையெடுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/426977" இருந்து மீள்விக்கப்பட்டது