சட்டவாக்க அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஒரு நாட்டின் '''சட்டவாக்க அவை''' அல்லது '''சட்டவாக்க சபை''' என்பது, ...
(வேறுபாடு ஏதுமில்லை)

13:14, 11 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

ஒரு நாட்டின் சட்டவாக்க அவை அல்லது சட்டவாக்க சபை என்பது, சட்டங்களை ஆக்குவதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும், நீக்குவதற்குமான அதிகாரம் கொண்ட ஒரு வகைக் கலந்தாய்வு அவை ஆகும். சட்டவாக்க அவைகள் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பொதுவான பெயர்களாக நாடாளுமன்றம், காங்கிரசு என்பவற்றைக் குறிப்பிடலாம். நாடாளுமன்ற முறையைக் கைக்கொள்ளும் நாடுகளில் சட்டவாக்க அவை மேன்மையான அதிகாரம் கொண்டது. இச் சபையிலிருந்தே தலைமை நிறைவேற்றுனராகச் செயல்படும் பிரதம அமைச்சர் தெரிவுசெய்யப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டவாக்க_அவை&oldid=427091" இலிருந்து மீள்விக்கப்பட்டது