சார்பாண்மை மக்களாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
[[கனடா]], [[ஆசுத்திரேலியா]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற சார்பாண்மை மக்களாட்சி நிலவும் நாடுகளில், சார்பாளர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இத் தேர்தல்கள் பெரும்பாலும் [[பன்மைத்துவம்|பன்மைத்துவ]] முறையில் அமைந்தவை. பன்மைத்துவத் தேர்தலில், வெற்றிபெறும் [[வேட்பாளர்]] தனித்தனியாக மற்ற ஒவ்வொரு வேட்பாளரிலும் கூடிய வாக்குகள் பெற்றால் போதுமானது. அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்கவேண்டிய அவசியம் இல்லை.
 
தற்போதுள்ள மக்களாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் தேர்தல் முறையையே பின்பற்றுகின்ற போதும், கோட்பாட்டளவில், குலுக்கல் முறை போன்ற பிற முறைகளிலும் சார்பாளர்கள் தெரிவு செய்யப்படலாம். சிலவேளைகளில் சார்பாளர்களே பிற சார்பாளர்களைத் தெரிவு செய்வதும் உண்டு. [[குடியரசுத் தலைவர்]] போன்ற பதவிகளுக்கு சார்பாளர்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர்.
 
தனிமனித சுதந்திரத்துக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கும் சார்பாண்மை மக்களாட்சி, [[தாராண்மை மக்களாட்சி]] (liberal democracy) எனப்படுகின்றது. அவ்வாறில்லாத சார்பாண்மை மக்களாட்சி [[தாராண்மையில் மக்களாட்சி]] (illiberal democracy) எனப்படும்.
 
[[பகுப்பு:அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சார்பாண்மை_மக்களாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது