சார்பாண்மை மக்களாட்சி (தொகு)
19:08, 12 செப்தெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
, 14 ஆண்டுகளுக்கு முன்தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''சார்பாண்மை மக்களாட்சி''' (Representative democracy) என்பது ஒருவகை [[மக்களாட்சி]] அரசு முறையாகும். இம்முறை, தனியாள் அதிகாரம் கொண்ட அரசு முறை, எல்லா மக்களுமே நேரடியாகப் பங்குபெறும் [[நேரடி மக்களாட்சி]] முறை என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது, இம்முறையில் [[தேர்தல்]] மூலம் மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினர் மக்கள் சார்பில் அரசைக் கட்டுப்படுத்துகின்றனர்.
இம் முறையில் சார்பாளர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செய்பவர்களாக இருப்பதில்லை. மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, மாறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி உகந்த முறையில் இயங்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. நேரடி மக்களாட்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சியில் சார்பாளர்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செயல்படுபவர்களாக இருப்பர்.
|