ஈழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hu:Eelam
சி தானியங்கிஇணைப்பு: vi:Ílam; cosmetic changes
வரிசை 2:
 
தற்காலத்தில் [[இலங்கை]] என அழைக்கப்படும் [[தீவு]] பழங்காலத்தில் '''ஈழம்''' என அறியப்பட்டது. பழந்தமிழ் [[தமிழ் இலக்கியம்|இலக்கியங்க]]ளில் காணப்பட்ட 'ஈழத்துணவு', '[[ஈழத்துப் பூதந்தேவனார்]]' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட [[சாசனம்|சாசனங்க]]ளும் '''ஈழம்''' அல்லது '''ஈழ மண்டலம்''' என்ற பெயரைப் பயன்படுத்தின.
== பெயர்த் தோற்றம் ==
'''ஈழம்''' என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.
 
== 'தமிழு'ம் 'ஈழ'மும் ==
ஈழம் என்ற சொல்லுக்குப் [[பாளி மொழி|பாளி]] அல்லது [[சிங்கள மொழி|சிங்கள]] மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் '''ஈழம்''' என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.
== தற்காலத்தில் 'ஈழம்' ==
இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் [[ஈழகேசரி]], [[ஈழநாடு (பத்திரிகை)|ஈழநாடு]] போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் '[[தமிழீழம்]]' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி '''ஈழம்''' ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.
== வெளி இணைப்புகள் ==
*[http://kanaga_sritharan.tripod.com/elavar.htm A Short History of the Words Ilam and Ilavar] by Peter Schalk
 
வரிசை 19:
[[hu:Eelam]]
[[sv:Eelam]]
[[vi:Ílam]]
"https://ta.wikipedia.org/wiki/ஈழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது