கோபுரம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கோபுரம், கோபுரம் (கோயில்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பிற கோபுரங்களில் இருந்து வேற
No edit summary
வரிசை 21:
===பாண்டியர் காலம்===
ஏறத்தாழ கி.பி 1100 அளவில் தொடங்கிய பிற்காலப் பாண்டியர் காலத்தில் இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. கருவறையைச் சுற்றியிருந்த பிற கட்டிட அமைப்புக்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. சிறப்பாக வாயில் கோபுரங்கள் முதன்மை பெறத்தொடங்கின. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பதற்கு [[இந்தியக் கட்டிடக்கலை]] பற்றிய நூலொன்றை எழுதிய [[பேர்சி பிரவுண்]] என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் ஏராளமான சிறிய கோயில்களுட் பல, கட்டிடக்கலை அடிப்படையில் சிறப்பு வாய்ந்தனவாக இல்லாவிட்டாலும், புனிதத்தன்மை கொண்டனவாகக் கருதப்பட்டன. இந்த உணர்வு காரணமாகப் பெரிதாக்குவதற்காக அவற்றை இடிப்பது கூடாது எனக் கருதப்பட்டது. இதனால் கருவறையை அவ்வாறே இருக்கவிட்டு அதனை அண்டி வேறு அமைப்புக்களை உருவாக்கிக் கோயிலை விரிவாக்கத் தலைப்பட்டனர். கோயிலின் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக அதனைச் சூழப் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. வாயில்களிலே கோபுரங்களும் விமானத்தையும் தாண்டிப் பெரியவையாக வளரலாயின<ref>பிரவுண், பேர்சி.; இந்தியக் கட்டிடக்கலை பௌத்த மற்றும் இந்து காலப்பகுதி (Indian Architecture, Buddhist and Hindu Period); டி. பி, தாராப்பூர்வாலா சன்ஸ் அண்ட் கம்பனி; 1971 (ஆறாம் பதிப்பு); பக் 88.</ref>. கோபுரங்களின் உயரம் வளர்வது கோயிலின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி அதனைக் கட்டுவித்தவரது அதிகார பலத்துக்கும் சாட்சியாக அமைந்தது.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.muthukamalam.com/muthukamalam_sutrula3.htm முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான கஜீராஹோ சிற்பக் கலைக் கோயில்கள் - கட்டுரை ]
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோபுரம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது