"காரை சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,378 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
*சிறுவர் நாடகங்கள்: மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், பாவம் நரியார்
 
==அறிஞர்கள் பார்வையில்==
 
;திரு கோ.சி.வேலாயுதம் (முன்னாள் கல்விப்பணிப்பாளர்): அகிம்சைவழி அரசியல்வாதி. இலங்கை தமிழரசுக் கட்சியின் நெருங்கிய தொடர்பாளன். யாழ்ப்பாண மாநகரசபைக் கீதம் தந்த கவிக்குயில்.சிலப்பதிகார மாநாட்டில் கவிதைக்குப் பரிசுபெற்ற இருவரில் ஒருவர். புகழேணியின் உச்சிக்கே சென்ற மிச்சிடும் மேதை.
 
;பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை (யாழ் பல்கலைக் கழகம்): மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கூத்து, நாடக நடிகர், நாடக இயக்குனர், ஆய்வாளர் எனப் பலந்ப்லைகளில் தன்னை மிகச் சிறப்பாக இனங்காட்டிய கலாநிதி காரை சுந்தரம்பிள்ளையின் கலை இலக்கியப் பணி விதந்து பாராட்டத்தக்கது.
 
;கவிஞர் வி.கந்தவனம்: திரு சுந்தரம்பிள்ளையின் கவிதைகளை எல்லாப் பத்திரிகைகளும் விரும்பி ஏற்கின்றன. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இவரது கவிதைகள் பெரிதும் கொண்டிருக்கக் காணலாம்.சமூக சீர்திருத்த இயக்கங்களில் நல்ல ஈடுபாடுகொண்ட இவர் ஒரு நகைச்சுவப் பேச்சாளருமாவர். நல்ல தமிழ் அன்பர்; சிறந்த பண்பாளர்.
 
;திரு ப.சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்): கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் பலவிதங்களில் எனக்கு ஆதர்ஸ புருஷராகத் திகந்தவர். முதலில் என்னால் எட்டப்படவே முடியாதவர் என நான் அண்ணாந்து பார்த்த அவர் பின்னர் எனது மிக நெருங்கிய நண்பர் என்று கூறக்கூடிய அளவுக்கு மிகவும் எளிமையும், அன்பும், பண்பும் வாய்ந்தவராக என்னோடு பழகியபோது நான் அடைந்த வியப்பும், பெருமையும், மகிழ்ச்சியும் இங்கு வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதவை.
 
;கலாபூஷணம் முல்லைமணி வே.சுப்பிரமணியம்: கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பழகுவதற்குச் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன் நான். கவியரங்குகளில் அவர் வாசித்த கவிதைகள், அவரது கதிதை ஆற்றலையும் மிக லாவகமாக, சுவையாக அவற்றை அரங்கில் சமர்ப்பித்த பாங்கினையும் வெளிப்படுத்தின. ஒட்டிசுட்டான் பாரதி விழாக் கவியரங்கில் கற்றோர் மாத்திரமன்றிச் சாதாரண மக்களும் அவரது கவிதைப் பாணியினால் ஈர்க்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
 
;கவிஞர் இ.நாகராஜன்:
சுந்தரம் பிள்ளை அரங்குகளில்
சொல்லும் கவியிற் சுழன்றுவரும்
சந்தம் கருத்து சபைகவரும்
தக்கோர் தலைகள் அசைந்தாடும்
 
;கவிஞர் சோ.பத்மநாதன்:
 
காரை என்ற புனைபெயர் தாங்கியே
கவிதை வானில் எறித்த முழுநிலா
ஊரைத் தன்னெழுத் தூழியத் தால்தமிழ்
உலகெல்லாம் நிலை நாட்டிய உத்தமன்
ஆர வாரமற்(று) ஆய்வுகள் செய்தவன்
அநுப வஸ்த்தன் ஆசிரியர் நடுவன்ஓர்
தாரகை எனப் போற்றிடத் தக்கவன்
தமிழ ரானவர் முதுசொம்நம் சுந்தரம்
 
நாட்டுக் கூத்துக்கள் ஆடி நயந்தவன்
நாடகத்தின் வளங்கள் அறிந்தவன்
ஏட்டில் கூத்துப் பழக்கும் அண்ணாவியார்
இரவெ லாம்மத் தளத்தொ டிசைத்திடும்
பாட்டில் நெஞ்சைப் பறிகொடுத் துப்பல
பாத்திரங்களை ஆட்டிப் படைத்தவன்
வாட்டும் நோய்தரு வாதையினூடும் நம்
மலைய கத்தவர் கூத்தை ஆராய்ந்தவன்
 
;கவிஞர் காசி ஆனந்தன்:
 
பல்துறை ஆற்றலன் அறிஞன்
பாவலன் இலக்கியன் ஆசான்
சொல்வளம் மிக்கவன் தமிழன்
சுவைதோய்ந்து நின்றவன் கலைஞன்
தொல் தமிழ்க்கூத்தினை ஆராய்ந்தோன்
தொய்வறியாத் தமிழ்த் தொண்டன்
நல்லவன் மடிவதோ எங்கள்
நாடிதைத் தாங்குமோ அம்மா
 
==உசாத்துணை நூல்கள்==
*கவிஞர்காரை - நினைவு மலர்(2005)
*மணி விழா மலர்(1998)
*மற்றும் காரை அவர்களின் நூல்களின் அணிந்துரைகள்
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/431005" இருந்து மீள்விக்கப்பட்டது