"அந்தலைத்தாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

191 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{Book structure}} [[Image:Klostermayr Titel.jpg|left|thumb|250px|1722 ஆம் ஆண்டைச் சேர்ந்த [[மத்தியாசு கு...)
 
{{Book structure}}
'''அந்தலைத்தாள்''' என்பது ஒரு [[நூல்|நூலின்]], முன்புறத்திலும், பின்புறத்திலும் காணப்படும் இரண்டு பக்கங்களைக் குறிக்கும். இவை நூலை விரித்த அளவிலான தாள்கள் ஆகும். இது இரண்டாக மடிக்கப்பட்டிருக்கும். முன்புற அந்தலைத்தாளில் இரண்டாக மடித்த ஒருபகுதி முன் [[நூல் அட்டை|அட்டை]]யின் உட்புறத்தில் முழுமையாக ஒட்டப்பட்டிருக்கும். அடுத்த பகுதியின் மடிப்பை அண்டிய ஓரம் [[தலைப்புப் பக்கம்|தலைப்புப் பக்கத்தின்]] கட்டிய ஓரத்துடன் இறுக்கமாக ஒட்டப்பட்டிருக்கும். இது போன்றே பின்புற அந்தலைத் தாளின் ஒருபகுதி பின் அட்டையுடனும், மற்றப் பகுதியின் மடிப்பை அண்டிய ஓரம் நூலின் கடைசிப் பக்கத்தின் கட்டிய ஓரத்துடனும் ஒட்டப்பட்டிருக்கும். உண்மையில் இந்த அந்தலைத் தாள்கள் நூலையும் அதன் அட்டையையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றன.
[[Image:Klostermayr Titel.jpg|left|thumb|250px|1722 ஆம் ஆண்டைச் சேர்ந்த [[மத்தியாசு குளொசுத்தர்மேயிர்]] என்னும் நூலின் அந்தலைத் தாளையும், தலைப்புப் பக்கத்தையும் காட்டும் படம்.]]
'''அந்தலைத்தாள்''' என்பது ஒரு நூலில், [[தலைப்புப் பக்கம்|தலைப்புப் பக்கத்துக்கு]] எதிர்ப் பக்கத்தில் காணப்படும் படத்துடன் கூடிய ஒரு பக்கம் ஆகும். தலைப்புப் பக்கத்தை விரிக்கும்போது பொதுவாகத் தலைப்புப் பக்கம் வலப்பக்கத்திலும், அந்தலைத்தாள் இடப்பக்கத்திலும் இருக்கும். [[பைபிள்]] போன்ற மதிப்புமிக்க பழைய நூல்களில் இப் பக்கம் நுணுக்கமான அழகூட்டல்களுடன் கூடிய பக்கமாக அமையும். இவ்வாறான பல படங்கள் புகழ்பெற்ற வரைகலை உருப்படிகளாகவும் உள்ளன. நூலின் உள்ளடக்க விடயத்துடன் தொடர்புள்ள படங்களே இப்பக்கத்தில் அமைவது வழக்கம். இது நூலில் விவரிக்கப்படும் ஒரு காட்சியாகவோ அல்லது [[ஒளிப்படம்|ஒளிப்படங்களாகவோ]] இருக்கலாம். தற்கால நூல்களில் இப்பக்கம் காணப்படுவது குறைவு.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[நூல் வடிவமைப்பு]]
* [[புத்தகம் கட்டுதல்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/431703" இருந்து மீள்விக்கப்பட்டது