பாறைநெய் தூய்விப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
 
==பிரித்தல்==
[[பெட்ரோலியம்|கரட்டு நெய்]]யில் கலந்திருக்கும் பல்வேறு [[மூலக்கூறு]]களைப் பிரித்து எடுப்பது முதல் படி. நெடிதுயர்ந்தநெடிந்துயர்ந்த துளித்தெடுப்புக் கோபுரங்களில் (distillation towers) வெப்பம் ஏற்றி கொதிநிலை வேறுபாட்டு அடிப்படையில் வெவ்வேறு கூறுகள் தனித்தனியே பிரித்து எடுக்கப்படும். இதற்காக வரிசையாகப் பல துளித்தெடுப்புக் கோபுரங்கள் பயன்படுத்தப்படும். ஒரு கோபுரத்தின் அடியில் இருந்து வெளியேறும் கனமான கூறு அடுத்த கோபுரத்தினுள் செலுத்தி வைக்கப்படும். ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் எரிகலன்களில் (furnace) சூடுபடுத்தப்படும் கரட்டு நெய்யின் ஒரு பகுதி [[ஆவி]]யாக மாறும். இந்த ஆவியும் நீர்மமும் சேர்ந்த கலவை கோபுரத்தினுள் அனுப்பி வைக்கப்படும். உள்ளீட்டு அல்லது ஊட்டுவாய் அருகே தான் அதிக வெம்மையாக இருக்கும். அந்த வெப்பநிலையில் நீர்மமாக இருக்கும் பகுதி கோபுரத்தின் கீழே செல்லும். ஆவியாக இருப்பவை மேலே செல்லும். மேலே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். அந்தக் குறைகின்ற வெப்பத்திற்கேற்ப சில கூறுகள் மீண்டும் நீர்மமாகும். இவ்வாறு வெவ்வேறு கூறுகளாகப் பிரிவனவற்றைப் பக்கவாட்டில் இருந்து வெவ்வேறு உயரங்களில் வெளியே எடுப்பதன் மூலம் கரட்டு நெய்யைப் பிரிக்கலாம். இதிலே வளிமங்கள் கோபுரத்தின் உச்சியிலும், தார் முதலிய அதிகப் [[பிசுக்குமை]] உள்ள பொருட்கள் கோபுரத்தின் அடியிலும் கிடைக்கும். இவ்வாறு பிரிக்கப்படும் கூறுகள் பெரும்பாலும் இன்னும் ஒரு முடிவுறா நிலையிலேயே இருக்கும் என்பதால் மேலும் சில செலுத்தங்களுக்குட்படுத்தப்பட்டு அதன் பிறகே சந்தைக்கு அனுப்பி வைக்கப்படும்.
 
==மாற்றல்==
"https://ta.wikipedia.org/wiki/பாறைநெய்_தூய்விப்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது