விசையாள்சில்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<sup>Superscript text</sup>[[Image:Leonardo-Flywheel.ogg|thumb|300px|இறுக்கத்தன்மை கொண்ட வடிவமைப்புக்களிலும் கூடுதலான வேக வீதத்தைத் தரக்கூடிய விசையாள்சில்லு ஒன்றின் நிகழ்படம். [[லியொனார்டோ டா வின்சி]]யின் வரைபடத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது.]]
'''விசையாள்சில்லு''' என்பது குறிப்பிடத்தக்க அளவு சடத்துவத் திருப்புதிறன் கொண்டதும், சுழற்சி ஆற்றலைச் சேமிக்க உதவுவதுமான ஒரு [[எந்திரவியல்]] கருவி ஆகும். விசையாள்சில்லுகள் அவற்றின் [[சுழற்சி வேகம்|சுழற்சி வேகத்தில்]] ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்த்து நிற்கக்கூடியவை. இந்த இயல்பு [[ஆடுதண்டு]] இயந்திரங்களால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வு கொண்ட [[முறுக்கு விசை]]யை வலுமூலமாகக் கொண்டு இயங்கும் சுழல் அச்சுக்களின் சுழற்சிவேகத்தை, உறுதிப்படுத்த உதவுகின்றது. அண்மைக்காலங்களில், வண்டிகளிலும், மின்னுற்பத்தி இயந்திரங்களிலும் ஆற்றல் சேமிப்புக் கருவியாகப் பயன்படுத்துவதற்காக விசையாள்சில்லு தொடர்பான ஆய்வுகள் பரவலாக நடைபெறுகின்றன.
 
==பயன்பாடு==
விசையாள்சில்லுகள் பண்டைக்காலம் முதலே பயன்பாட்டில் இருந்துவருகின்றன. [[மட்பாண்டம்]] வனைதற்சில்லு இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஆகும். [[தொழில் புரட்சி]]யின்போது [[ஜேம்சு வாட்]] தனது [[நீராவி எந்திரம்|நீராவி எந்திரத்தில்]] பயன்படுதியதன் மூலம் விசையாள்சில்லின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தார். இவரது சம காலத்தைச் சேர்ந்தவரான [[ஜேம்சு பிக்கார்ட்]] விசையாள்சில்லை [[மாற்றச்சு]] ஒன்றுடன் சேர்த்துப் பயன்படுத்தியதன் மூலம், [[இடுவழி இயக்கம்|இடுவழி இயக்கத்தை]] சுழற்சி இயக்கமாக மாற்றினார்.
 
விசையாள்சில்லுகள், துளையிடு எந்திரங்களிலும், [[தறைதல்|தறையும்]] எந்திரங்களிலும் பயன்படுகின்றன. இவற்றில் விசையாள்சில்லுகள் மோட்டாரிலிருந்து கிடைக்கும் ஆற்றலைச் சேமித்துப் பின்னர் வெளிவிடுகின்றன.
 
[[பகுப்பு:எந்திரவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விசையாள்சில்லு" இலிருந்து மீள்விக்கப்பட்டது