"வ. வே. சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

660 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வ. வே. சு. ஐயர், வ. வே. சுப்பிரமணியம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி
* ''குளத்தங்கரை அரசமரம்'' என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
* இவரது ''மங்கையர்க்கரசியின் காதல்'' என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
* [[1921]]-[[1922|22]] காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், ''கம்பராமாயண ஆராய்ச்சி'' எனும்(''KAMBARAMAYANA அரிய-A STUDY'') எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் [[1950]] இலேயே நூலாக வெளிவந்தது. [[கிரேக்கம்]], [[இலத்தீன்], [[பிரெஞ்சு]], [[ஆங்கிலம்]], [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு.படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் [[1990]] இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
* கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
* ''கம்ப நிலையம்'' என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று [[அம்பாசமுத்திரம்]] [[அருவி]] காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா" என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு [[பாபநாசம் அருவி]]யில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து [[1925]] [[ஜூன் 4]]ல் அணைந்தது.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html வ.வே.சு.ஐயர் எழுதிய கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை], மின்னூல்
 
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
1,17,264

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/437983" இருந்து மீள்விக்கப்பட்டது