நோய்க்காரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
[[தடுப்பூசி]] (vaccination), [[கிருமியெதிர்ப்பி]] (antibiotics), பங்கசு எதிர்ப்பி அல்லது [[பூஞ்சையெதிர்ப்பி]] (fungicides) பாவனைகளால், மருத்துவ முன்னேற்றமானது பல நோய்க்காரணிகளின் தொற்றையும், அவற்றால் உருவாகும் நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், மேலும் புதிய நோய்க்காரணிகளின் அறிமுகத்தாலும், ஏற்கனவே காணப்படும் நோய்க்காரணிகளில் ஏற்படும் தெரிவான மாற்றங்களால், அவை மருந்துகளுக்கெதிரான எதிர்ப்புத் தன்மையைக் காட்டும் புதிய வகைகளை உருவாக்கிக் கொள்வதாலும், நோய்க்காரணிகளால் மனித இனத்திற்கு இருக்கும் ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நல்ல உணவுப் பழக்க வழக்கத்தை கொண்டிருத்தல், தகுந்த உடல் சுகாதாரம் பேணல், நல்ல குடிநீர்ப் பாவனை போன்ற சில செயற்பாடுகளால் நோய்க்காரணிகளின் தாக்கத்தை ஓரளவு குறைத்து வைத்திருக்க முடியும்.
==வகைகள்==
நோய்க்காரணிகளின் உருவ அமைப்பு, மற்றும் அவை தாம் வாழும் [[ஓம்புயிர்|ஓம்புயிரில்]] ஏற்படுத்தும் தாக்கம் என்பவற்றைக் கொண்டு நோய்க்காரணிகள் வகைப்படுத்தப்படலாம்.
===[[வைரசு]]===
[[வைரசு|வைரசுக்கள்]] பொதுவாக 20-300nm நீளமுள்ள உயிரினங்களாகும். Adenoviridae, Picornaviridae, Herpesviridae, Hepadnaviridae, Flaviviridae, Retroviridae, Orthomyxoviridae, Paramyxoviridae, Papovaviridae, Rhabdoviridae, Togaviridae குடும்ப உறுப்பினர்களாகிய [[வைரசு|வைரசுக்களே]] பொதுவான நோயுருவாக்கும் வைரசுக்களாக இருக்கின்றன. இவை உருவாக்கும் குறிப்பிடும்படியான [[தொற்றுநோய்கள்]] [[சின்னம்மை]], [[தட்டம்மை]], [[கூவைக்கட்டு]], [[பெரியம்மை]] போன்றன. அபாயகரமான [[நோய்|நோயான]] [[எய்ட்சு]] நோய்க்காரணி, பல்வேறு வகையான [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சலைத் தரும் நோய்க்காரணிகளும் [[வைரசு|வைரசுக்களே]] ஆகும்.
===[[பாக்டீரியா]]===
[[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] பொதுவாக 1-5µm நீளமுள்ள உயிரினங்களாகும்.
அதிகமான [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] நோயிருவாக்காதவையாகவும், ஆபத்தற்றவையாகவும், நன்மை பயப்பனவாகவும் இருந்தபோதிலும், சில [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] ஏற்படுத்துகின்றன. உலகில் மிகவும் பொதுவானதும், அதிகளவில் காணப்படுவதுமான பாக்டீரியவால் உருவாகும் [[நோய்]] [[காசநோய்]] ஆகும். இந்நோயானது, ''Mycobacterium tuberculosis'' என்னும் [[பாக்டீரியா|பாக்டீரியாவினால்]] ஏற்படும் [[தொற்றுநோய்]] ஆகும். Streptococcus, Pseudomonas போன்ற [[பாக்டீரியா|பாக்டீரியாக்களால்]], [[நுரையீரல் அழற்சி]] அல்லது நியூமோனியா (Pneumonia) வும், Shigella, Campylobacter, Salmonella போன்ற [[பாக்டீரியா|பாக்டீரியாக்களால்]] சில உணவிலிருந்து உருவாகும் [[தொற்றுநோய்|தொற்றுநோய்களும்]] வருகின்றன. இவை தவிர, [[ஏர்ப்புநோய்]] (tetanus), [[தொழுநோய்]] (leprosy), [[தைபொய்ட் காய்ச்சல்]] (typhoid fever), [[குக்கல்]] (diphtheria), [[சிபிலிசு]] (syphilis) எனப்படும் [[பாலியல் நோய்]] போன்றனவும் [[பாக்டீரியா|பாக்டீரியாக்களால்]] ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகும். [[பாக்டீரியா|பாக்டீரியாவினால்]] ஏற்படும் [[தொற்றுநோய்|தொற்றுநோய்களை]] கட்டுப்படுத்த [[கிருமியெதிர்ப்பி|கிருமியெதிர்ப்பிகள் அல்லது நுண்ணுயிர்கொல்லிகள்]] பாவிக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றிற்கெதிராக புதிய வகை பக்டீரியாக்கள் உருவாவது பெரும் பிரச்சனையை தருகிறது (உ.ம்: [[காசநோய்|காசநோய்க்கு]] பாவிக்கப்படும் மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட (Multi Drug Resistance) M.tuberculosis வகை தோன்றியிருப்பதால் [[காசநோய்|காசநோய்க்]] கட்டுப்பாடு போதியளவில் செயற்படுத்த முடியாமல் உள்ளது.
===பூஞ்சை===
பூஞ்சை அல்லது பங்கசு [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]] பொதுவாக [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யானது மிகவும் தளர்ந்த நிலமையில் இருக்கும்போதே ஏற்படுகின்றன.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது