நோய்க்காரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
===புரோட்டோசோவா===
[[Image:Malaria.jpg|thumb|100px|This false-colored [[electron micrograph]] shows a [[malaria]] [[sporozoite]] migrating through the [[midgut]] [[epithelia]].]]
புரோட்டோசோவா (Protozoa) தொகுதியைச் சேர்ந்த, [[பிளாஸ்மோடியம்]] (Plasmodium) என்னும் [பேரினம்|பேரினப்]] பிரிவிலடங்கும் உயிரினமானது [[மலேரியா]] [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] மனிதரில் உருவாக்குகிறது. அனோபிலசு வகையைச் சார்ந்த பெண் நுளம்புகளே இந்த [[பிளாஸ்மோடியம்]] உயிரினத்தை ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு காவிச் செல்கின்றது. இந் [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இந்நோய்க்கெதிராக, தடுப்பு மருந்துகள் பாவனையும் நடைமுறையில் உள்ளது.
==பரவல்==
நோய்க்காரணிகளின் பரவல் உணவு, நீர், காற்று, தொடுகை, பாலியல் தொழிற்பாடுகள் மற்றும் நோய்க்காவிகள் மூலமாக நடைபெறுகின்றது.
கழிவுநீர்க் கால்வாய்கள் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படாமையால், அல்லது அவற்றில் ஏற்படும் சேதங்களால் அவை நன்னீரில் கலப்பதாலோ, பயிர் நிலங்களில் சென்றடைந்து நமது உணவுகளுடன் சேர்வதனாலோ அசுத்தமடையும் உணவு, நீர் போன்றவற்றால், நோய்க்காரணிகள் பரவலாம்.
காற்றுத் துணிக்கைகளை ஒருவர் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியேற்றும்போது, அவற்றுடன் வெளியேறும் நோய்க்காரணி காற்றில் கலந்து மற்றவருக்கு தொற்றை ஏற்படுத்தலாம். இவ்வகை தொற்று பொதுவாக சுவாசத் தொகுதி தொடர்பான நோய்களை உருவாக்கும்.
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது