நோய்க்காரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
===[[வைரசு]]===
[[File:Reconstructed Spanish Flu Virus.jpg|thumb|[[Transmission electron microscopy|Transmission electron microscope]] image of a recreated [[1918 influenza]] virus|alt=An electron micrograph of the virus that caused Spanish influenza]]
[[வைரசு|வைரசுக்கள்]] புரத உறையினால் மூடப்பட்ட டீ.என்.ஏ (DNA) அல்லது ஆர்.என்.ஏ (RNA) மூலக்க்கூறுகளைக் கொண்ட, தாம் வாழும் [[யஉயிரினம்|உயிரினத்தின்]] உடலினுள் மட்டுமே பல்கிப் பெருகும் தன்மை கொண்ட உயிரினமாகும். பொதுவாக இவை 20-300nm நீளமுள்ள உயிரினங்களாகும்.
[[வைரசு|வைரசுக்கள்]] பொதுவாக 20-300nm நீளமுள்ள உயிரினங்களாகும். Adenoviridae, Picornaviridae, Herpesviridae, Hepadnaviridae, Flaviviridae, Retroviridae, Orthomyxoviridae, Paramyxoviridae, Papovaviridae, Rhabdoviridae, Togaviridae குடும்ப உறுப்பினர்களாகிய [[வைரசு|வைரசுக்களே]] பொதுவான நோயுருவாக்கும் வைரசுக்களாக இருக்கின்றன. இவை உருவாக்கும் குறிப்பிடும்படியான [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]] [[சின்னம்மை]], [[தட்டம்மை]], [[கூவைக்கட்டு]], [[பெரியம்மை]] போன்றன. அபாயகரமான [[நோய்|நோயான]] [[எய்ட்சு]] நோய்க்காரணி, பல்வேறு வகையான [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சலைத் தரும் நோய்க்காரணிகளும் [[வைரசு|வைரசுக்களே]] ஆகும்.
===[[பாக்டீரியா]]===
[[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] கருமென்சவ்வற்ற கருவைக் கொண்ட, எளிய கல அமைப்பையுடைய [[நுண்ணுயிர்|நுண்ணியிர்கள்]] ஆகும். பொதுவாக 1-5µm நீளமுள்ள உயிரினங்களாகும்நீளமுடையவை.
[[Image:M leprae ziehl nielsen2.jpg|thumb|right|''Mycobacterium leprae'', one of the causative agents of leprosy. As [[acid-fast]] bacteria, ''M. leprae'' appear red when a [[Ziehl-Neelsen stain]] is used.]]
அதிகமான [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] நோயிருவாக்காதவையாகவும், ஆபத்தற்றவையாகவும், நன்மை பயப்பனவாகவும் இருந்தபோதிலும், சில [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] ஏற்படுத்துகின்றன. உலகில் மிகவும் பொதுவானதும், அதிகளவில் காணப்படுவதுமான பாக்டீரியவால் உருவாகும் [[நோய்]] [[காசநோய்]] ஆகும். இந்நோயானது, ''Mycobacterium tuberculosis'' என்னும் [[பாக்டீரியா|பாக்டீரியாவினால்]] ஏற்படும் [[தொற்றுநோய்]] ஆகும். Streptococcus, Pseudomonas போன்ற [[பாக்டீரியா|பாக்டீரியாக்களால்]], [[நுரையீரல் அழற்சி]] அல்லது நியூமோனியா (Pneumonia) வும், Shigella, Campylobacter, Salmonella போன்ற [[பாக்டீரியா|பாக்டீரியாக்களால்]] சில உணவிலிருந்து உருவாகும் [[தொற்றுநோய்|தொற்றுநோய்களும்]] வருகின்றன. இவை தவிர, [[ஏர்ப்புநோய்]] (tetanus), [[தொழுநோய்]] (leprosy), [[தைபொய்ட் காய்ச்சல்]] (typhoid fever), [[குக்கல்]] (diphtheria), [[சிபிலிசு]] (syphilis) எனப்படும் [[பாலியல் நோய்]] போன்றனவும் [[பாக்டீரியா|பாக்டீரியாக்களால்]] ஏற்படும் [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]] ஆகும். [[பாக்டீரியா|பாக்டீரியாவினால்]] ஏற்படும் [[தொற்றுநோய்|தொற்றுநோய்களை]] கட்டுப்படுத்த [[கிருமியெதிர்ப்பி|கிருமியெதிர்ப்பிகள் அல்லது நுண்ணுயிர்கொல்லிகள்]] பாவிக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றிற்கெதிராக புதிய வகை பக்டீரியாக்கள் உருவாவது பெரும் பிரச்சனையை தருகிறது (உ.ம்: [[காசநோய்|காசநோய்க்கு]] பாவிக்கப்படும் மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட (Multi Drug Resistance) M.tuberculosis வகை தோன்றியிருப்பதால் [[காசநோய்|காசநோய்க்]] கட்டுப்பாடு போதியளவில் செயற்படுத்த முடியாமல் உள்ளது.
வரி 20 ⟶ 21:
[[பூஞ்சை]] அல்லது பங்கசு [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]] பொதுவாக [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யானது மிகவும் தளர்ந்த நிலமையில் இருக்கும்போதே ஏற்படுகின்றன. [[பூஞ்சை|பூஞ்சையின்]] [[உயிரணு|உயிரணுக்கள்]] அல்லது கலங்கள், தாம் வாழும் [[ஓம்புயிர்|ஓம்புயிரின்]] [[உயிரணு|உயிரணுக்களை]] ஒத்திருப்பதால், அவற்றின் [[உயிரணு|உயிரணுக்களை]] அழிக்க [[கிருமியெதிர்ப்பி|கிருமியெதிர்ப்பிகளைப்]] பாவிக்க முடியாது. [[பூஞ்சையெதிர்ப்பி]] பாவிக்கப்படலாம்.
===Prions===
நியூக்கிளிக் அமிலங்களைக் கொண்டிராத தொற்றுநோய்க்காரணிகள் Prions என அழைக்கப்படும். Prion தொற்றினால் ஏற்படும், புரதமூலக் கூறுகளின் தொழிற்பாட்டுக் குறைவே நோய்க்கு காரணமாகின்றது. இவ்வகை நோய்களாவன scrapie, bovine spongiform encephalopathy (mad cow disease), Creutzfeldt–Jakob disease <ref>[http://www.mad-cow.org/~tom/prionSP.html ''The prion diseases''] STANLEY B. PRUSINER, Scientific American</ref>.
===புரோட்டோசோவா===
[[Image:Malaria.jpg|thumb|100px|This false-colored [[electron micrograph]] shows a [[malaria]] [[sporozoite]] migrating through the [[midgut]] [[epithelia]].]]
புரோட்டோசோவா (Protozoa) தொகுதியைச் சேர்ந்த, [[பிளாஸ்மோடியம்]] (Plasmodium) என்னும் [பேரினம்|பேரினப்]] பிரிவிலடங்கும் உயிரினமானது [[மலேரியா]] [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] மனிதரில் உருவாக்குகிறது. அனோபிலசு வகையைச் சார்ந்த பெண் நுளம்புகளே இந்த [[பிளாஸ்மோடியம்]] உயிரினத்தை ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு காவிச் செல்கின்றது. இந் [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இந்நோய்க்கெதிராக, தடுப்பு மருந்துகள் பாவனையும் நடைமுறையில் உள்ளது.
===பல்கல விலங்கு ஒட்டுண்ணிகள்===
[[Image:Eophasma jurasicum.JPG|thumb|left|150px|''Eophasma jurasicum'', an extinct nematode]]
[[Image:Hookworm LifeCycle.gif|thumb|right|150px|Hookworm [[Biological life cycle|life cycle]]]]
பல ஒட்டுண்ணிப் புழுக்கள் இவ்வகையான நோய்க்காரணிகளாக இருக்கின்றன. [[வட்டப்புழு]] (roundworm), [[நாடாப்புழு]] (tapeworm), [[கொக்கிப்புழு]] (hookworm) போன்றன அவற்றில் சில.
தொற்றுக்குட்பட்ட [[உயிரினம்|உயிரினத்தின்]] கழிவுகளால் அசுத்தப்படுத்தப்பட்ட மண்ணிலிருந்து, வெறும் காலுடன் நடந்து செல்லும் ஒருவருக்கு அல்லது அசுத்தப்படுத்தப்பட்ட நீரிலிருந்து நீந்தும் ஒருவருக்கு [[கொக்கிப்புழு]] தொற்றலாம். தொற்றும் புழுவானது ஒரு சில வினாடிகளிலேயே தோலினூடாக உடலினுள் சென்று, பின்னர் [[நுரையீரல்|நுரையீரலுக்கு]] கடத்தப்படும். பின்னர் அங்கிருந்து இருமும்போது வெளிநோக்கி வந்து மீண்டும் விழுங்கப்படுவதால், உணவுக்கால்வாய் தொகுதியினுள் பிரவேசித்து, குடலை அடைந்து, அங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்ந்தபடியே, தான் வாழும் [[ஓம்புயிர்|ஓம்புயிருக்கு]] ஊறு விளைவிக்கும். அவை இடும் முட்டைகள் மீண்டும் தொற்றுக்குட்பட்டிருக்கும் உயிரினத்தின் கழிவுடன் வெளியேற்றப்பட்டு தன் வாழ்க்கை வட்டத்தை தொடரும்.
[[நாடாப்புழு]], [[வட்டப்புழு]] போன்றவற்றின் முட்டைகள் அல்லது குடம்பி நிலைகள் பச்சையாக உண்ணப்படும் அல்லது சரியாக சமைக்காமல் உண்ணப்படும் பன்றி இறைச்சி, சில கடல் உணவு வகைகளின் மூலம் புதிய உயிரினக்களின் உணவுக்கால்வாய்த் தொகுதியூடாக உள்ளே சென்று குடல் பகுதியில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தபடி, தொற்றுக்குட்பட்ட உயிரினத்திற்கு ஊறு விளைவிக்கும்.
 
==பரவல்==
நோய்க்காரணிகளின் பரவல் உணவு, நீர், காற்று, தொடுகை, பாலியல் தொழிற்பாடுகள் மற்றும் நோய்க்காவிகள் மூலமாக நடைபெறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது