"தொற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நோய்க்கடத்தலை தடுப்பதற்கு, ஒவ்வொரு நோயையும் உருவாக்கும் [[உயிரினம்]] பற்றி, [[நோய்|நோயின்]] இயல்புபற்றி, [[நோய்]] கடத்தப்படும் முறைபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இயல்புகளாவன, [[நோய்க்காரணி|நோய்க்காரணியின்]] நோய்த்தொற்று வீரியம் (virulence), நோய்ப் பாதிப்புக்கு உட்பட்டிருப்பவர் செல்லும் தூரம், நோய்த் தொற்றின் நிலை என்பனவாகும்.
 
உதாரணமாக [[எய்ட்சு]] எனப்படும் மனித நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோயுருவாக்கும் [[வைரசு|வைரசானது]] (HIV) மனிதரைத் தாக்கும்போது, அதன் வீரியம் (virulence) குறைவாக இருப்பதுடன், தொற்றுக்குட்பட்டவரின் [[நோய் எதிர்ப்பாற்ரல்எதிர்ப்பாற்றல் முறைமை]] தொகுதியை (immune system) மிக மெதுவாகவே பாதிப்பதால் அவரின் இறப்பும் மெதுவாகவே நடக்கும். அந்தக் கால இடைவெளியில் அவர் நீண்ட தூரம் பயணித்து, மேலும் பலருக்கு இந்த [[வைரசு|வைரசை]] பரப்ப முடியும். தாம் இந்த [[வைரசு|வைரசின்]] தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, பலர் இந்த [[நோய்|நோயைக்]] காவி ஏனையோருக்கும் தொற்றச் செய்ய முடிவதனால், இந்நோயானது மிக வேகமாக தூர இடங்களுக்கு பரவி கொள்ளைநோயாக (epidemic disease) உருவெடுக்கும். அதனால் நோய்த் தொற்றும் முறையை அறிந்து தொற்று ஏற்படாமல் இருக்க உகந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும்.
 
அதேநேரம் வீரியம் கூடிய, மிக விரைவாக தாக்கப்பட்டவரின் உடல் தொழிலியல்களை பாதிக்கக்கூடிய [[நோய்க்காரணி|நோய்க்காரணியின்]] தாக்கத்திற்குட்படும் ஒருவர் மிக விரைவில் இறப்பதனால், அவர் அதிக தூரம் பயணம் செய்ய முடியாமல் போவதனால், [[நோய்]] விரைவாகப் பரவினாலும், ஒரு குறுகிய பிரதேசத்தினுள் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இப்படிப்பட்ட நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் பரவலை தடுக்க முடியும்.
23,849

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/444417" இருந்து மீள்விக்கப்பட்டது