தொற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மருத்துவ சோதனையில், ஒரு [[நோய்|நோயானது]] [[நோய்|நோயை]] உருவாக்கும் திறன் கொண்ட வைரசு, பக்டீரியா, [[பூஞ்சை|பங்கசு அல்லது பூஞ்சை]], [[ப்ரோட்டோசோவா]], மற்றும் பல்கல [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகள்]] போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் '''தொற்றுநோய்''' என அழைக்கப்படுகிறது. இந் [[நோய்க்காரணி|நோய்க்காரணிகள்]] (pathogen) [[விலங்கு|விலங்குகளிலும்]], [[தாவரம்|தாவரங்களிலும்]] [[நோய்|நோயை]] ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம்<ref>[http://www.mercksource.com/pp/us/cns/cns_hl_dorlands.jspzQzpgzEzzSzppdocszSzuszSzcommonzSzdorlandszSzdorlandzSzdmd_c_49zPzhtm Dorland's Illustrated Medical Dictionary] 2004 WB Saunders.</ref>. நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றினால், நீரினால், உண்ணப்படும் [[உணவு|உணவினால்]], தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு [[நோய்க்காவி|நோய்க்காவியினால்]] தொற்றுநோயானது கடத்தப்படலாம்<ref name= McGraw>"Infectious disease." [http://www.mhest.com/ McGraw-Hill Encyclopedia of Science and Technology], The McGraw-Hill Companies, Inc., 2005.</ref>. விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்[http://www.who.int/topics/infectious_diseases/en/].
 
[[நோய்க்காரணி|நோய்க்காரணி]] ஒன்றின் '''தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது''' (infectivity), அந் [[நோய்க்காரணி|நோய்க்காரணியானது]] ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, [[ஓம்புயிர்|ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள்]] பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். '''தொற்றும் தன்மையானது''' (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும்<ref>[http://www.doh.wa.gov/notify/other/glossary.htm Glossary of Notifiable Conditions] Washington State Department of Health</ref>. தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், [[நோய்க்காரணி|நோய்க்காரணியால்]] தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.<ref name= McGraw>"Infectious disease." ''[[McGraw-Hill Encyclopedia of Science and Technology]]''. The McGraw-Hill Companies, Inc., 2005.</ref>
"https://ta.wikipedia.org/wiki/தொற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது