"பேச்சு:எறும்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,048 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
:கூர்ப்பு என்பது மிக அருமையான சொல். இதனைப் பற்றி விக்கிப்பீடியாவில் வேறோர் இடத்தில் உரையாடி இருக்கின்றோம். தமிழ்நாட்டில் படிவளர்ச்சி, படிமலர்ச்சி என்னும் சொற்களும் எவல்யூசன் என்பதற்கு ஈடாகப் பயன்பாட்டில் உள்ளது. --[[பயனர்:செல்வா|செல்வா]] 10:30, 4 நவம்பர் 2009 (UTC)
::கூர்ப்பு என்ற சொல் எனக்கு இலங்கையில் கற்ற பொழுதில் அறிமுகமாகி இருந்தபோதிலும், வேறு நாடுகளில் இருப்பவர்களுக்கும் இந்த ‘கூர்ப்பு' என்னும் சொல் அறிமுகமானது என்றே அறிந்ததாய் நினைவு. எனவே இந்தச் சொல் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் அறிமுகமான சொல்லா என்பது தெரியவில்லை. நுளம்பு என்பதை தமிழ்நாட்டினர் கொசு என்று சொல்வதை பல இலங்கைத் தமிழர்களும் அறிந்தே உள்ளனர் என நம்புகின்றேன். நான்கூட [[நோய்க்காவி]] கட்டுரையில் நுளம்பு / கொசு என்ற இரு சொற்களையும் பயன்படுத்தியுள்ளேன். வெவ்வேறு இடத்தைச் சார்ந்தவர்களும், வெவ்வேறு சொற்களைப் பாவிக்கையில், அவை தெரிந்திருப்பின், அவற்றை கட்டுரைகளில் குறிப்பிடுவது, எவரும் சிரமமின்றி இலகுவில் விளங்கிக் கொள்ள உதவும் என்பதால், அவற்றை குறிப்பிடுவதே சிறந்தது என நினைக்கிறேன். கொசு என்ற சொல் இலங்கையில் வேறொரு பூச்சியைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். யாழில் பனம்பழம் வரும் காலங்களில் இவ்வகை பூச்சிகள் பனம்பழத்தைச் சுற்றி பறந்து கொண்டிருக்கும். இவை நுளம்புகளை விடவும் மிகச் சிறியவையாக இருக்கும். அப்பூச்சிக்குரிய ஆங்கிலப் பெயரோ அல்லது அறிவியல் பெயரோ தெரியவில்லை. அப்பூச்சியை தமிழ்நாட்டில் எப்படி அழைப்பார்கள் யாராவது அறிந்தால் கூறுங்கள்.--[[பயனர்:கலை|கலை]] 12:32, 4 நவம்பர் 2009 (UTC)
:::கூர்ப்பு என்னும் சொல் பற்றிய உரையாடலை [[பேச்சு:படிவளர்ச்சிக் கொள்கை]] என்னும் பக்கத்தில் காணலாம். தமிழில்நுளம்பு என்னும் சொல் அறிந்ததுதான், ஆனால் பேச்சு வழக்கில் கொசு
என்பது பரவலாக அறியப்படும் ஒன்று. கண்கொசு என்பார்கள் அதன் ஆங்கிலப் பெயரும்
தெரியவில்லை. இவற்றுக்கெல்லாம் விரைவில் சரியான அறிவியல் பெயர் அறிந்த்து விரிவாக தமிழில் எழுத வேண்டும். --[[சிறப்பு:Contributions/99.237.20.227|99.237.20.227]] 12:52, 4 நவம்பர் 2009 (UTC)
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/445192" இருந்து மீள்விக்கப்பட்டது