கோலாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கோலாட்டம்''' என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இக் கலை நிகழ்த்தப்படுகிறது. கையில் கழிகளை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்பு பெற்ற ஒன்று. பல்வேறு பகுதிகளில் கண்ணன் பிறந்த நாளன்று சமயச்சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள்.
[[கோல்|கோல்களை]] ஒன்றுடன் ஒன்று தட்டி ஒலி எழுப்பி இது ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டம் ஆகும். குறிப்பாக பெண்கள் வட்டமாக நின்று கோல்களை மாறி மாறி அடித்து, பாடி, ஆடுவர். இது ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது.
 
==இனக்கலை ==
[[காணிக்காரர்கள்]] என்னும் ஆதியினம் கோலாட்டத்தை தங்கள் இனக்கலையாகக் கொண்டிருந்தது. காணிக்காரர்களின் தலைவர் மூட்டுக்காணி. ஓணம் பண்டிகை அன்று இவரது தலைமையில் ஊர்ப்பொதுவிடத்தில் பிரமாண்டமான கோலாட்டம் நிகழ்த்தப்படும். தொடக்கத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள்.
 
== புராணக்கதை ==
தேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்தொழிப்பது தான் தன் பிறப்பின் லட்சியம் என்று உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அசுரன். பந்தாசுரனை அழித்தொழிக்கும் நோக்கோடு களமாடுகின்றனர் தேவர்கள். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாகியது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் கலையவில்லை. பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்தது. கோலாட்டத்தின் மேன்மையை விளக்கும்
புராணக்கதை இது.
 
 
 
 
 
 
[[கோல்|கோல்களை]] ஒன்றுடன் ஒன்று தட்டி ஒலி எழுப்பி இது ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டம் ஆகும். குறிப்பாக பெண்கள் வட்டமாக நின்று கோல்களை மாறி மாறி அடித்து, பாடி, ஆடுவர். இது ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது.
 
 
 
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கோலாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது