"கோலாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,802 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கோலாட்டம்''' என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இக் கலை நிகழ்த்தப்படுகிறது. கையில் கழிகளை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்பு பெற்ற ஒன்று. பல்வேறு பகுதிகளில் கண்ணன் பிறந்த நாளன்று சமயச்சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள்.
 
==காணிக்காரர்கள்/இனக்கலை ==
[[காணிக்காரர்கள்]] என்னும் ஆதியினம் கோலாட்டத்தை தங்கள் இனக்கலையாகக் கொண்டிருந்தது. காணிக்காரர்களின் தலைவர் மூட்டுக்காணி. ஓணம் பண்டிகை அன்று இவரது தலைமையில் ஊர்ப்பொதுவிடத்தில் பிரமாண்டமான கோலாட்டம் நிகழ்த்தப்படும். தொடக்கத்தில் இக்கலையைஇவர்கள் திருமணமாகாதகொரண்டி, ஆண்கள்கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளை கழியாகப் பயன்படுத்துவார்கள். இக்கழிகள் பளபளப்பாகவும், அடித்து ஆடும்போது கணீரென ஒலி எழுப்புவதாகவும் இருக்கும். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மட்டுமே நிகழ்த்தினர்இக்கழி தரும் மரங்கள் வளர்கின்றன. இப்போது பெண்கள்வனத்துறை பெரும்பான்மையாகநிர்ப்பந்தத்தால் இக்கலையில்காட்டுப்பகுதியை பங்கேற்கிறார்கள்காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் கையில் கிடைக்கும் எந்த குச்சியையும் பயன்படுத்துகிறார்கள்.
 
காணிக்காரர்களின் கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும். பிற சமூகத்தினரின் கோலாட்டத்தில் தலைவர்களின் சிறப்புகள், புராண, இதிசாகங்கள் என்பன பாடுபொருளாகக் கொள்ளப்படும்.
 
== வகைகள் ==
ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக்கும்மி என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
 
== பின்னல் கோலாட்டம் ==
கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாக கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள். பெரும்பாலும் திருமண வீடுகளில் இந்தக் கலையாடல் நிகழும்.
 
கோலாட்டத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்பார்கள். ஆசான் இறந்து போனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தியபடி செல்வார்கள்.
 
தமிழகத்தின் பிற பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அரசு விழாக்களில் மரபு சாராத கோலாட்டம் நிகழ்கிறது. கன்னியாகுமரியில் இயங்கும் களரி அமைப்பும், திண்டுக்கல்லில் இயங்கும் சக்தி கலைக்குழுவும் இக்கலையை விடாது இயக்குகின்றன.
 
தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும். இதற்கென தனி அடவுகளும் உண்டு. இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் "தாண்டியா" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.
 
== புராணக்கதை ==
3,455

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/446622" இருந்து மீள்விக்கப்பட்டது