ஒளிப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==வரலாறு==
நிலைத்து இருக்கக்கூடிய முதல் ஒளிப்படம் 1825 ஆம் ஆண்டில் பிரான்சியக் கண்டுபிடிப்பாளரான [[சோசப்யோசெப் நிசெபோர் நியெப்சே]] (Joseph Nicéphore Niépce) என்பவரால் உருவாக்கப்பட்டது. 1724 ஆம் ஆண்டில், வெள்ளித் தூளும், சுண்ணத் தூளும் கலந்த கலவை, ஒளி படும்போது கரு நிறமாக மாறுகின்றது என்ற [[சான் என்றிச் சுல்ட்சு]] (Johann Heinrich Schultz) என்பவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒளிப்படம் உருவாக்கப்பட்டது. நிசெப்சேயும், [[லூயிசு டாகுவேரே]] (Louis Daguerre) என்பவரும் இதனை மேலும் மேம்படுத்தினர். டாகுவரே, முதலில் ஒளி படவிடுவதற்கு முன்னர் வெள்ளியை [[அயடீன்]] ஆவியில் காட்டிப் பின்னர் ஒளி படவிட்ட பின்னர் [[பாதரசம்|பாதரச]] ஆவியில் காட்டினார். இதைப் பின்னர் உப்புநீர்த் தொட்டியில் இடுவதன் மூலம் விம்பம் படமாக நிலையானது. இதிலிருந்தே ''டாகுவேரியோவகை'' எனப்படும் ஒளிப்பட வகை உருவானது.
 
''டாகுவேரியோவகை'' ஒளிப்பட முறையில் பல பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக, இதன் மூலம் ஒளிப்படத்தின் ஒரு படியை மட்டுமே உருவாக்க முடிந்தது. அதிலிருந்து பல படிகளை உருவாக்கக் கூடியதாக இருக்கவில்லை. வேறு மேம்பட்ட முறைகளை உருவாக்குவதற்குப் பலர் முயன்று வந்தனர். இவர்களால் உருவாக்கப்பட்ட பல வழிமுறைகள் குறுகிய காலங்களுக்குப் பயன்படுத்தபட்டன. 1848 ஆம் ஆண்டில் [[கொலோடியன் முறை]] எனப்படும் முறை அறிமுகமானது. இது கொலோடியன் எனப்படும் கரைசல் பூசிய கண்ணாடித் தகட்டை ஒளியுணர் மேற்பரப்பாகக் கொண்டது. இதில் உருவாக்கப்பட்ட எதிர் விம்பத்திலிருந்து வேறு தாள்களில் பல படிகளை எடுக்க முடிந்தது. 1871ல் இதிலும் மேம்பட்ட [[ஊன்பசை முறை]] (gelatin process) அறிமுகமானது. எனினும், கொலோடியன் முறையும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது. இன்று வரை பயன்பாட்டில் உள்ள கறுப்பு வெள்ளை ஒளிப்படங்கள் முன் குறிப்பிட்ட ஊன்பசை முறையை அடிப்படையாகக் கொண்டனவே. தகட்டை உருவாக்கப் பயன்படுத்திய பொருட்கள் மாறினவேயன்றி அடிப்படைகளில் அதிக மாற்றம் ஏற்படவில்லை.
 
நிற ஒளிப்படங்களை உருவாக்கும் முயற்சிகளும் கறுப்பு வெள்ளைப் படங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளைப் போலவே மிகவும் பழையன. எனினும் 1903 ஆம் ஆண்டுக்குப் பின்னரே நிற ஒளிப்படங்கள் ஓரளவு நடைமுறைக்கு வந்தன.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது