ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்''' (United Nations Environment Programme) என்பது, [[ஐக்கி...
(வேறுபாடு ஏதுமில்லை)

05:21, 20 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (United Nations Environment Programme) என்பது, ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு அமைப்பு ஆகும். இது வளர்ந்துவரும் நாடுகள் சூழல் தொடர்பில் பயனுள்ள கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு உதவுவதுடன், முறையான சூழல்சார் செயல்முறைகள் ஊடான தாங்கு வளர்ச்சியையும் ஊக்குவித்து வருகிறது. கெனியாவின் தலைநகரான நைரோபியில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு, மனிதச் சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து 1972 யூன் மாதத்தில் நிறுவப்பட்டது. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்துக்கு ஆறு உலகப்பகுதி அலுவலகங்களும், பல நாடுகளுக்கான அலுவலகங்களும் உள்ளன.

உலகம், உலகப்பகுதிகள் ஆகிய மட்டங்களில் சூழல்சார் விடயங்களுக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு இதுவே. சூழல் தொடர்பான ஒருமனதான கொள்கைகளின் உருவாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான ஆணை இதற்கு வழங்கப்பட்டுள்ளது. உலகம் தழுவிய சூழலைத் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்படுத்துவதன் மூலமும், புதிதாக உருவாகக்கூடிய பிரச்சினைகளை அரசுகளினதும், உலக சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலமும் இப்பணியை ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செய்து வருகிறது.