"ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,490 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
உலகம், உலகப்பகுதிகள் ஆகிய மட்டங்களில் சூழல்சார் விடயங்களுக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு இதுவே. சூழல் தொடர்பான ஒருமனதான கொள்கைகளின் உருவாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான ஆணை இதற்கு வழங்கப்பட்டுள்ளது. உலகம் தழுவிய சூழலைத் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்படுத்துவதன் மூலமும், புதிதாக உருவாகக்கூடிய பிரச்சினைகளை அரசுகளினதும், உலக சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலமும் இப்பணியை ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்துக்கான ஆணையும் அதன் குறிக்கோள்களும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அறிவிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டவை. 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2997 (XXVII), அதற்கு 1992 இல் செய்யப்பட்ட திருத்தங்கள், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் ஆட்சிக் குழுவின் 19 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் பங்கும் ஆணையும் தொடர்பான நைரோபி அறிக்கை, 2000 ஆண்டு மே 31 ஆம் தேதி வெளியிடபட்ட மால்மோ அமைச்சக அறிக்கை என்பன இவையாகும்.
 
இவ்வமைப்பின் நடவடிக்கைகள் [[வளிமண்டலம்]], கடல்சார்ந்தனவும், நிலம்சார்ந்தனவுமான [[சூழ்நிலை மண்டலம்|சூழ்நிலை மண்டலங்கள்]] என்பன சார்ந்த விடயங்களோடு தொடர்புபட்டவை. பன்னாட்டுச் சூழல் மரபொழுங்குகளை உருவாக்குவதிலும்; சூழல் அறிவியல், தொடர்பான தகவல்கள், கொள்கைகளில் அவற்றின் பங்குகள் குறித்து விளக்குதல்; கொள்கைகளை உருவாக்குதல் அவற்றை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் நாட்டு அரசுகளுடனும், உலகப்பகுதி அமைப்புக்களுடனும் பணியாற்றுதல்; சூழல்சார் அரசுசாரா அமைப்புக்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் ஆகியவற்றில் இவ்வமைப்புக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/450414" இருந்து மீள்விக்கப்பட்டது